

தமிழகத்தில் நிலங்கள் தொடர்பாக, வருவாய்த்துறையினரால் எட்டு வகை பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. தற்போது இவற்றுக்கான நடைமுறை அனைத்தும் இணையவழியாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஒன்று வழக்கமாக நிலமாற்றத்தின் போது வழங்கப்படும் பட்டாவாகும்.
ஒரு நிலத்தை அப்படியே வாங்கும் போது பட்டா மாற்றம் எளிதாக நடைபெறும். ஒரு நிலத்தை பிரித்து ஒரு பங்கை வாங்கும் போது, பட்டா மாறுதல் காலம் எடுக்கும். அடுத்தது கூட்டுப்பட்டா, ஒரு குடும்பத்தில் சகோதர, சகோதரிகள் ஒரு இடத்தை பிரித்துக் கொள்ளும் போது இந்த கூட்டுப்பட்டா முறையில் பட்டா வழங்கப்படுகிறது.அடுத்தது, பதிவுகளை மேம்படுத்தும் திட்ட (யுடிஆர்- அப்டேட் ரிஜிஸ்ட்ரி ஸ்கீம்) பட்டாவாகும். நகர்ப்புறங்களில் நில உரிமைக்காக இந்த யுடிஆர் பட்டாக்கள் அதிகளவில் வழங்கப்படுகிறது.