

“ஒரு காலத்தில் காகிதத்தில் வீட்டின் வரைபடத்தை அச்சிட்டோம்; இன்று அந்த வரைபடத்தில் இருக்கும் வீட்டையே அச்சிடத் தொடங்கிவிட்டோம்!” வீடு என்பது நான்கு சுவர்களின் கூட்டுத்தொகை அல்ல; நடுத்தரக் குடும்பத்தின் பல ஆண்டு சேமிப்பின் வடிவம்.
ஆனால் செங்கல், மணல், சிமென்ட், கம்பி, கூலி என கட்டுமானச் செலவுகள் குடும்பங்களின் சொந்த வீடு கனவை எட்டாத உயரத்துக்குக் கொண்டு செல்கின்றன. இந்தச் சூழலில் நம்பிக்கை தரும் புதிய தொழில்நுட்பமாக உருவெடுத்திருக்கிறது 3D பிரிண்டிங் கட்டுமானம்.
சென்னையின் ஐஐடி வளாகத்திலேயே இந்தியாவின் முதல் 3D பிரின்டிங் வீடு உருவானது என்பது தமிழகத்துக்குப் பெருமை. சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் தொடங்கிய Tvasta நிறுவனம் உருவாக்கிய சுமார் 600 சதுர அடி கொண்ட அந்த ஒற்றைத் தள வீட்டில் படுக்கையறை, கூடம், சமையலறை ஆகியவை இடம்பெற்றன. 2021 ஏப்ரலில் திறக்கப்பட்டது.