

இ
ருபதாம் நூற்றாண்டுக்குப் பிறகு கட்டுமானத் துறையில் புதிய புதிய வடிவமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. வழக்கமான கட்டுமானத்துக்கு மாறாக பலவகையான உருவமைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டன.
நொறுங்கிய வடிவமைப்பு, வளைவுக் கட்டிடம், வானுயர் கட்டிடம் போன்றவை அதற்கு உதாரணங்கள். இது வடிவற்ற வடிவம் (Deconstructivism) என அழைக்கப்பட்டது. பிரெஞ்சு தத்துவவியலாளர் ழாக் தெரிதா இதை உருவாக்கினார்.
இந்தப் புதிய முறையில் பீட்டர் ஈஸ்மேன், ஃப்ராங்க் கெரி, ஷாகா ஹதித் ஆகிய முன்னணிக் கட்டிடக் கலைஞர்கள் கட்டிடங்களை எழுப்பினார்கள். இந்த வகையில் ஷூ தயாரிப்பு நிறுவனத் தலைமையகக் கட்டிடத்தை அதுபோல் ஷூ வடிவத்தில் உருவாக்கலாம்.
அதுபோல ஹைதராபாத்தில் உள்ள மீன் ஆராய்ச்சி நிறுவனக் கட்டிடம் மீன் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாதிரி விலங்குகள் உருவங்களிலும் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பறவை உருவில் உள்ள கட்டிடங்கள் அபூர்வமாக இருந்தன. இப்போது அந்த வடிவிலும் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அம்மாதிரிக் கட்டிடங்களின் ஒளிப்படத் தொகுப்பு இது.