வகை வகையான படிக்கட்டுகள்

வகை வகையான படிக்கட்டுகள்
Updated on
1 min read

மு

ன்பெல்லாம் படிக்கட்டுகள் வீட்டுக்கு வெளியே அமைக்கப்படுவதுதான் பெரும்பாலும் வழக்கமாக இருந்தது. இப்போது வீட்டுக்குள்ளேயே படிகள் அமைக்கப்படுகின்றன. இவை மாடிக்குச் செல்வதற்கு பயன்படுவதுடன் வீட்டுக்கு அழகையும் தேடித் தருகின்றன. அந்தப் படிக்கட்டுகளை வடிவமைப்பதில் பல முறைகள் இருக்கின்றன.

இவ்வகைப் படிக்கட்டுகள் பெரிய வீடுகளுக்கு ஏற்றவை. வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்ற இடங்களிலும் இந்த வகைப் படிக்கட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த வகைப் படிக்கட்டுகளைப் பழைய வீடுகளில் காண முடியும். முன்பு அதிகமாகப் புழக்கத்தில் இருந்தது. படிகள் நேராகச் செல்லாமல் சற்றே வளைந்து செல்லும்.

இந்த வகைப் படிக்கட்டுகள் சிறிய வீடுகளுக்கு ஏற்றவை. நேராகச் செல்லாமல் எல் வடிவத் திருப்பம் உள்ள படிக்கட்டுகள் அணுகுவதற்கு ஏற்றவை. இந்தத் திரும்பிச் செல்லும் இடத்தைப் பொறுத்துப் பல வகை உள்ளன.

கீழ்த்தளம் மிகச் சிறிய பரப்பாக இருக்கும்பட்சத்தில் மரபான படிக்கட்டுகள் அமைத்தால் அதுவே பாதி இடத்தை எடுத்துக்கொள்ளும். அம்மாதிரியான இடங்களுக்குச் சுழல் படிக்கட்டுகள் ஏற்றவை. இந்தப் படுக்கட்டு கீழ்த்தளத்திலிருந்து சுழன்று செல்வதால் அது கீழ்த்தளத்தில் எடுத்துக்கொள்ளும் இடம் குறைவு. இது பெரும்பாலும் இரும்பால் உருவாக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in