வேடிக்கையான வீடுகள்

வேடிக்கையான வீடுகள்
Updated on
1 min read

வீட்டுக்கான சாத்திர நடைமுறைகளைப் பின்பற்றியும், வீட்டில் இருக்க வேண்டிய வசதிகளைப் பின்பற்றியும் வீடுகள் கட்டி, அந்த வீடுகள் பிறர் பார்வையில் பட்டு நம் வீட்டிற்கு எந்தக் கெடுதலும் வந்துவிடக் கூடாது என்று கண் திருஷ்டி பொம்மைகள் வைத்து இருக்கும் பல வீடுகளைப் பார்த்திருக்கிறோம்.

பிறர் கண்ணில் நம் வீடுகள் வித்தியாசமானதாகப் பட வேண்டும் என்பதற்காகவே வேடிக்கையான வடிவமைப்பில் உலகில் சில வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த வீடுகளில் சுமார் 59 வீடுகளின் படத்தை ‘வேடிக்கையான வீடுகள்’ எனும் தலைப்பில் ஒரு இணையதளம் காட்சிப்படுத்தி இருக்கிறது.

இந்த வீடுகள் பார்வைக்கு வேடிக்கையாக இருந்தாலும், எப்படியெல்லாம் சிலர் யோசிக்கிறாங்க...? என்று நம்மையும் யோசிக்க வைக்கின்றன... இந்த வேடிக்கை வீடுகளைப் பார்க்க நீங்கள் ரூமெல்லாம் போட வேண்டாம். இணையதளத்தைச் சுற்றி வந்தாலேயே போதும். பல்வேறு விதமான வேடிக்கையான வீடுகளைப் பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in