

உடம்பைக் குளிர்விப்பது என்பதில் இருந்துதான் குளிப்பது என்ற சொல் வந்திருக்கும். ஆனால் குளித்தல் என்பது உடம்பைக் குளிர்விக்கும் செயல் மட்டும் அல்ல. உடலில் படிந்திருக்கும் அழுக்கைப் போக்கி, உடம்பையும் மனத்தையும் உற்சாகப்படுத்தும் செயல். அதனால் நீராட்டுதல் என்பதே இதற்குப் பொருத்தமான சொல்லாக இருக்க முடியும். இது பேராசிரியர் தொ.பரமசிவனின் கூற்று. இப்படியாக அழுக்கு தீர குளிக்க வேண்டுமானால் பொறுமையாக அமர்ந்து குளிக்க வேண்டும் இல்லையா?
நாற்காலி வகை ஷவர் இருக்கை
இப்படியாக அமர்ந்து குளிக்க அந்தக் காலத்தில் ஆற்றங்கரை ஓரங்களில் படித்துறை இருக்கும். கண்மாய்க் கரைகளில் கல் இருக்கைகள் இருக்கும். குளியல் வீட்டுக்குள் ஆன பிறகு மக்கள் பலகைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இன்றைக்கு ஷவருடனான அதி நவீனக் குளியலறைகள் வந்த பிறகு ஷ்வர் இருக்கை வந்துவிட்டது. இந்த ஷவர் இருக்கைகள் சுவரில் பொருத்தும்படியாகவும் கிடைக்கிறது. நாற்காலி போன்ற வடிவத்திலும் கிடைக்கிறது. இவற்றில் உள்ள பல வடிவங்களைக் காணலாம்.
திண்ணை வகை ஷவர் இருக்கை
சுவர் ஓர ஷவர் இருக்கை