உங்கள் ஊருக்கு ஏற்றதா ஏர் கூலர்?

உங்கள் ஊருக்கு ஏற்றதா ஏர் கூலர்?
Updated on
1 min read

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக்காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக ஏசியைவிட விலை குறைவு இது. மேலும் ஏசியைக் காட்டிலும் ஏர் கூலர் பராமரிப்பும் குறைவுதான். ஆனால் ஏர்கூலர் உங்கள் ஊரில் உபயோகிக்க ஏற்றதா, என்பதையும் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஏர் கூலர் காற்றின் ஈரப்பதத்தின் அடிப்படியில் வேலைசெய்யக் கூடியது. காற்றின் ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் ஏர் கூலரின் செயல்பாடு உடல் நலத்துக்கு நல்லதல்ல. ஈரப்பதம் குறைவாக உள்ள ஊர்களுக்கே இவை ஏற்றவை. உதாரணமாகச் சென்னையின் சராசரி ஈரப்பத அளவு 70 சதவீதக்கும் அதிகம். அதனால் சென்னைக்கும் ஏர் கூலர் ஏற்றவை அல்ல எனச் சொல்லப்படுகிறது. ஏர் கூலர் ஈரப்பதத்தை அதிகரிக்கும் இயல்புடையது. ஏற்கனவே 70 சதவீதக்கும் அதிகமான சென்னையின் ஈரப்பதம் அதிகமானால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம். பொதுவாகக் கடற்கரைப் பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதனால் அம்மாதிரியான ஊர்களில் ஏர் கூலர் பயன்பாடு ஏற்புடையது அல்ல எனச் சொல்லப்படுகிறது.


ஆனால் ஈரப்பதம் குறைவாக உள்ள ஊர்களுக்கு ஏர் கூலர் ஏற்றவை. உதாரணமாக டெல்லியின் ஈரப்பத அளவு 12 சதவீதம்தான். இந்த மாதிரி நகரங்களில் ஏர் கூலரின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். அதுபோலவே டெல்லியின் ஏர் கூலரின் பயன்பாடு மிக அதிகம். அங்கு முன்னணி நிறுவனங்களின் ஏர் கூலர் அல்லாமல் எண்ணற்ற உள்ளூர்த் தயாரிப்பு ஏர் கூலரும் விற்பனையாவது பயன்பாடு அதிகமாக இருப்பதால்தான். ஆனால் சில நிறுவனங்கள் எல்லா ஈரப்பதத்திலும் செயல்படும் விதமாக ஏர் கூலர் வடிவமைத்துள்ளதாக விளம்பரங்கள் செய்துள்ளன. ஆனால் இது எத்தனை தூரம் வேலைசெய்யும் எனத் தெரியவில்லை.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in