ஜன்னல்கள்: குட்டிக் கதவுகள்

ஜன்னல்கள்: குட்டிக் கதவுகள்
Updated on
3 min read

ஜன்னல்களைக் குட்டிக் கதவுகள் எனலாம். காற்றும், வெளிச்சமும் இந்தக் குட்டிக் கதவுகள் வழியாகத்தான் வருகின்றன; நமக்கு ஆரோக்கியத்தைத் தருகின்றன. இந்த ஜன்னலகளில் பல வகை இருக்கின்றன.

வளைவு வடிவ ஜன்னல் (Bow Shape Window)

இந்த வடிவ ஜன்னல் ஐரோப்பியக் கட்டிடக் கலையில் காணக் கூடியது. இங்கிலாந்தில் 18-ம் நூற்றாண்டில் இந்த வகை ஜன்னல்கள் முதன் முதலாக அமைக்கப்பட்டன. இவை வீட்டுக் கட்டிடத்துக்கு வெளியே புடைத்துத் தெரியும்படி உருவாக்கப்படும். அவை ஒரு வில் வடிவம் போல் இருக்கும் என்பதால் வில் வடிவ ஜன்னல் என்றும் அழைக்கப்படுகிறது. பிரம்மாண்டமான வீடுகளுக்கு இந்த வகை ஏற்றது.

இரட்டைத் தொங்கு ஜன்னல் (Double-Hung Windows)

இவ்வகை ஜன்னல் சமையலறைகளுக்கு ஏற்றவகை. இந்த வகை ஜன்னல்களில் கதவுகள், மேலிருந்து கீழாக சரியச் செய்வது போன்ற அமைப்பைக் கொண்டவை. அதாவது கதவு மேலிருந்து தொங்குவது போல இருக்கும். திறக்க வேண்டும் என்றால் அதை மேல் வாக்கில் தூக்க வேண்டும். அடைக்க கீழ் வாக்கில் சரியச் செய்ய வேண்டும்.

மடக்கு கதவு ஜன்னல் (Casement Windows)

கீல் வைத்துத் திறக்கும்படியான கதவுகளைக் கொண்ட ஜன்னல். பெரும்பாலும் இந்த வகை ஜன்னல்தான் பரவலான புழக்கத்தில் உள்ளன. எல்லாவிதமான அறைகளுக்கும் ஏற்ற ஜன்னல் இது. வெப்ப பிரதேச நாடுகளுக்கு ஏற்ற ஜன்னல் வகை இதுதான்.

பந்தல் மாதிரி ஜன்னல் (Awning Windows)

பெட்டியைத் திறப்பது போன்று மேல் புறம் கதவுகளைக் கொண்டது இவ்வகை ஜன்னல். இதன் மூடும் கதவு வெளிப்பக்கம் தள்ளுவதுபோல் இருக்கும். வெளிப்பகுதியில் பந்தல்போல் விரிந்திருக்கும். இவை வரவேற்பறைக்கு ஏற்றவை.

சித்திர வடிவ ஜன்னல் (Picture Model Window)

வரவேற்பறைக்கு ஏற்ற இந்த வகை ஜன்னல்கள் வெளிக் காட்சிகளை ஒரு சித்திரம்போல் காட்டக்கூட்டியவை. கதவுகளில் குறுக்குக் கம்பிகள் அற்று இருக்கும். இது வரவேற்பறையைச் சித்திரம்போல் அலங்கரிக்கும்.

பந்தல் மாதிரி ஜன்னல்

வரவேற்பறைக்கு ஏற்ற இந்த வகை ஜன்னல்கள் வெளிக் காட்சிகளை ஒரு சித்திரம்போல் காட்டக்கூட்டியவை. கதவுகளில் குறுக்குக் கம்பிகள் அற்று இருக்கும். இது வரவேற்பறையைச் சித்திரம்போல் அலங்கரிக்கும்.

நுழைவு வாயில் ஜன்னல் (Transom Window)

இது வீட்டின் நுழைவு வாயிலுக்கு மேலே அமைக்கப்படும் ஒரு வகை ஜன்னல். குளியலறைக்கு வெளிச்சம் வரும் கையிலும் இந்த வகை ஜன்னல் பொருத்தப்படுவதுண்டு.

நகரும் ஜன்னல் (Slider Window)

இந்த வகை ஜன்னலின் கதவுகள் பக்கவாட்டில் இரு புறமும் நகரக்கூடியவை. இந்த வகை ஜன்னல்களைப் பராமரிப்பது கடினம். பக்கவாட்டில் நகரும் அதன் பாதையில் தூசி அடைந்துவிட்டால் திறப்பது கடினமாக இருக்கும்.

நிலையான ஜன்னல் (Stationary Window)

இவை வீட்டின் மூலையில், அல்லது வரவேற்பறையில் நிலையாக பொருத்தக்கூடியவகை. இவை கதவுகள் அற்றவை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in