சாப்பாட்டு அறையை அழகாக்குவோம்

சாப்பாட்டு அறையை அழகாக்குவோம்
Updated on
1 min read

சாப்பாட்டு அறை என்பது இப்போதுதான் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இன்று வீடு கட்டும் பலரும் சாப்பாட்டு அறைக்கெனத் தனியாக அறையை உருவாக்குகிறார்கள். இட நெருக்கடி இருந்தால் சாப்பாட்டு மேசை போடுவதற்கென ஒரு இடத்தையாவது உருவாக்குவார்கள். வீட்டின் மற்ற பகுதிகளைப் போல அல்லாமல் இன்றைய காலகட்டத்தில் சாப்பாட்டு அறைக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது.

பரபரப்பான, நெருக்கடியான காலகட்டத்தில் நாம் வசிக்கிறோம். வீட்டு அங்கத்தினர்களே சந்தித்திப் பேசிக்கொள்வது அரிதுதான். இந்தச் சமயத்தில் சப்பாட்டு அறையின் தேவை முக்கியமானது. அப்படியான சமையல் அறையை அலங்கரிப்பது எப்படி எனப் பார்ப்போம்.

மேஜை, நாற்காலி தவிர சாப்பாட்டு அறைக்கு அழகான தொங்கு விளக்குகளை அமைக்கலாம். அவை அழகையும் ஒளியையும் தரும். அதுபோல சாப்பாட்டு அறைக்கு வண்ணம் மிகவும் முக்கியம். சாப்பாட்டு அறையின் சுவரில் கண்கவரும் வண்ணங்களைப் பூசுவதன் மூலம் மேலும் அழகுபடுத்த முடியும்.

உணவு மேஜையின் நிறம் அல்லது மேஜை விரிப்பின் நிறம் வெளிர் நிறமாக இருக்குமானால் சுவரின் நிறத்தை அடர்த்தியானதாக மாற்றுங்கள். உதாரணமாக, உங்கள் மேஜையின் நிறம் இளம் மஞ்சளில் இருந்தால் அதன் பின்னால் இருக்கும் சுவருக்கு ஆரஞ்சு நிறம் பூசலாம். மேஜையின் இரு புறங்களிலும் இருக்கும் சுவர்களுக்கு வெளிர் பச்சை நிறம் பூசலாம்.

இது அந்த அறையைப் பிரகாசமாக்கும், சாப்பாட்டு அறையானது வீட்டின் உட்புறத்தில்தான் இருக்கும் என்பதால் சூரிய ஒளியால் சுவரின் நிறங்கள் மங்க வாய்ப்பில்லை. இந்தப் பளிர் வண்ண அறை குழந்தைகளை அதிகம் ஈர்க்கும். காலை மற்றும் மதிய உணவு அருந்த இது சிறப்பான இடமாக மாறும். உங்கள் மேஜை, நாற்காலிகள் பிரவுன் நிறத்தில் இருக்குகிறது என்று வைத்துக் கொள்வோம். மேஜை பின்னால் இருக்கும் சுவருக்கு மெரூன் வண்ணம் பூசுங்கள். மேஜை, நாற்காலிகளின் நிறமும் மெரூனை ஒத்த நிறத்தில் இருக்கையில் அறையில் இருப்பவர்களுக்கு நெருக்கமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

அடுத்தபடியாக, நிறைய நாற்காலிகளை அகற்றிவிட்டு எதிர் எதிர் பார்த்தபடி இரு நாற்காலிகளை மட்டும் போடுங்கள். மேஜை மீது ஒரு வெளிர் நிற விரிப்பு போடுங்கள். அழகிய பூங்கொத்தைச் சிறிய குவளையில் அடுக்கி மேஜையின் நடுவே வைத்திடுங்கள். அறையில் மங்கலான ஒளிவீசும் ஒரு மின்விளக்கைப் பொறுத்துங்கள். மேஜையைச் சுற்றிச் சில மெழுகுவர்த்திகளை ஏற்றுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in