Published : 29 Feb 2020 11:48 AM
Last Updated : 29 Feb 2020 11:48 AM

எது சரியான சமையலறை

கனி

வழக்கமான சமையலறை, நவீன சமையலறை என எதுவாக இருந்தாலும் சரி, சமையலறையை திறன்மிகுந்ததாக வடிவமைப்பது அவசியம். அப்போதுதான், சமையலறையில் வசதியாக, நேரம், ஆற்றலை வீணடிக்காமல் பணியாற்ற முடியும். சமையலறையை வடிவமைக்கும்போது, பொருட்களின் பரிமாணங்களைத் திட்டமிட்டு வடிவமைக்க வேண்டும். சமையலறையைச் சரியான பரிமாணத்தில் அமைப்பதற்கான சில ஆலோசனைகள்…

சமையல் மேடையின் மீது பொருத்தும் அடுப்பை நின்றுகொண்டு சமைக்கும்போது, முதுகுவலி வராதவாறு பொருத்துவது அவசியம். சமையல் மேடையின் சரியான உயரம் 34 அங்குலம். இந்த அளவில் சமையல் மேடையை அமைத்தால், கழுத்துவலி, முதுகுவலி வருவதைத் தவிர்க்கலாம்.

சமையல் மேடையின் அளவு

சமையல் மேடைக்கும், அதற்குக் கீழே அமைக்கப்பட்டிருக்கும் இழுவை அலமாரிகளுக்கும் 2 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

சமையலறை மேல் அலமாரிகள்

சமையலறை மேடைக்கும், அதற்கு மேலே அமைக்கப்படும் அலமாரிகளின் உயரம் 24 முதல் 27 அங்குல உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். சமையலறையின் பின்னணி டைல்களை அமைத்தபிறகு, மேல் அலமாரிகளை அமைப்பது சிறந்தது.

அலமாரிகளின் உள்பகுதி

சமையலறை மேல் அலமாரிகளின் உள்பகுதி 12 முதல் 15 அங்குலத்துக்குள் இருக்க வேண்டும். இந்த அலமாரிகளைக் குறைவான உள்பகுதியுடன் அமைப்பது, நின்று சமைக்கும்போது தலையில் இடித்துக் கொள்ளாமல் இருக்க உதவும்.

அலமாரிகளின் அகலம்

சமையலறையின் மேல், கீழ் அலமாரிகளின் அகலம், சரிசமமாக இருப்பது அவசியம். இரண்டு கதவு அலமாரிகளின் அகலம் 30 முதல் 36 அங்குலங்களாக இருப்பது சிறந்தது. கதவுகளின் அகலம் ஒரு கதவுக்கு 2 அடி இருக்கலாம்.

அடுப்பும், புகைக்கூண்டும்

அடுப்புக்கும் புகைக்கூண்டுக்கும் இடையே இருக்கும் உயரம் 26 முதல் 30 அங்குலமாக இருக்க வேண்டும். ஒருவேளை, அடுப்புக்கும் புகைக்கூண்டுக்கும் இடையே இருக்கும் உயரம் 30 அங்குலத்துக்கு மேலே இருந்தால், அது புகைக் கூண்டின் செயல்திறனைப் பாதிக்கும்.

குளிர்சாதனப் பெட்டி

குளிர்சாதனப் பெட்டியைத் தேர்ந்தெடுக்கும்முன், அதன் உயரம், அகலம், ஆழம் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு வாங்குவது சிறந்தது. குளிர்சாதனப் பெட்டிக்கும் சுவருக்கும் இடையே 2 அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும்.

மைக்ரோவேவ் உயரம்

சமையலறை மேடையிலிருந்து 13 முதல் 18 அங்குல உயரத்தில் ‘மைக்ரோவேவ்’ கருவியைப் பொருத்த வேண்டும்.

இரண்டு மேடைகள்

சமையலறையில் இருபுறங்களிலும் மேடைகள் அமைப்பதாக இருந்தால் இரண்டு மேடைகளுக்கும் இடையில் நான்கு அடி இடைவெளி இருக்க வேண்டும். நான்கு அடிக்கும் குறைவான இடைவெளி இருந்தால், சமையலறையில் இரண்டு பேரால் ஒரே நேரத்தில் இணைந்து நிற்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x