Published : 28 Dec 2019 01:37 PM
Last Updated : 28 Dec 2019 01:37 PM

யுபிவிசி என்னும் அரும் பொருள்

சீதாராமன்

யுபிவிசி என அழைக்கப்படும் அண்ட்பிளாஸ்டிசைஸ் பாலிவினைல் குளோரைடு (Unplasticized Polyvinyl Chloride) என்னும் கட்டுமானப் பொருளின் பயன்பாடு இன்று கட்டுமானத் துறையில் பரவலாகிவருகிறது. கட்டுமானத் துறையில், ஜன்னல்கள், கதவுகள், தண்ணீர்க் குழாய்கள், பாசனக் குழாய்கள், தண்ணீர்த் தொட்டி, பிளவு பேனல்கள், தற்காலிகமான கூரை, ஆர்சிசி ஷட்டர் பொருட்கள் போன்றவற்றுக்கு யுபிவிசி பயன்படுத்தப்படுகிறது.

யுபிவிசியில் துருப்பிடிக்கும் தன்மையில்லாததால், இதை எளிதாகப் பயன்படுத்தலாம். அத்துடன், இதன் எடையும் மிகவும் குறைவு. மேலும், இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இதை முழுமையாக மறுசுழற்சி, மறுதயாரிப்பு செய்ய முடியும் என்பது இதன் சிறப்பான அம்சம். இதை மறுசுழற்சி செய்தபிறகு, அதிகமான வெப்பநிலையில் வைத்து புதியபொருட்களை உருவாக்க முடியும்.

யுபிவிசி பொருட்களின் ஆயுட்காலம் முடிந்தபிறகு, அவற்றை முழுக்க முழுக்க ஒரு புதிய பொருள் தயாரிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். அத்துடன், தயாரிப்பின்போது உருவாகும் கழிவுப் பொருட்களைக் கூட, மீண்டும் உபயோகிக்க முடியும். இதனால், நம்பகத்தன்மை, நிலைத்தன்மையுடன் ஒரு எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

யுபிவிசியின் இருக்கும் குறைவான வெப்பக் கடத்தும் திறன், வெப்பக் கடத்தலின் போது பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், உங்கள் மின் கட்டணத்தை 7-15 சதவீதம் வரை குறைக்க முடியும். அத்துடன், மரத்துக்கு மாற்றாக யுபிவிசியால் எளிமையாகச் செயல்பட முடியும். அலுமினிய தயாரிப்பு போலவே இதன் தயாரிப்பையும் ஆற்றல் திறனுடன் செய்ய முடியும். இதன் தரமான சீலிங், சூழலியல் மாசுக்களான ஒலி, தூசி, புகை போன்றவை வீட்டுக்குள் வராமல் தடுக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x