மேசையை மேம்படுத்தும் பொருட்கள்

மேசையை மேம்படுத்தும் பொருட்கள்
Updated on
2 min read

கனி

வீட்டின் வாசிப்பு, கணினி மேசைகளை ஒழுங்குபடுத்துவது என்பது சவாலான விஷயம்தான். ஆனால், மேசை ஒழுங்கமைக்கப் பட்டிருந்தால்தான் புத்தக வாசிப்பையோ பணியையோ கவனத்துடன் செய்ய முடியும். மேசையை எப்போதும் ஒழுங்கமைத்து வைத்து கொள்வதற்கு உதவும் சில பொருட்கள் இவை…

பத்திரிகை அடிக்கு

மேசை, இழுப்பறைகள் என அங்கங்கே சிதறிக்கிடக்கும் பத்திரிகைகள், புத்தகங்கள், கோப்புகளை இந்தப் பத்திரிகை அடுக்கில் அடுக்கிவைக்கலாம். ஒன்பதிலிருந்து பத்து புத்தகங்கள்வரை இதில் அடுக்கிவைத்துக்கொள்ளலாம். இதன் ஆன்லைன் விலை: ரூ. 499.

கம்பிச் சட்டகம்

புத்தக மேசைக்கு மேல் சிறிய பொருட்கள், ஒளிப்படங்கள், முக்கியக் குறிப்புகளை வைப்பதற்கு இந்தக் கம்பிச் சட்டகம் உதவும். சிறிய பூந்தொட்டிகளையும், ஒன்றிரண்டு புத்தகங்களையும் இதில் வைத்துகொள்ளலாம். இதன் ஆன்லைன் விலை: ரூ. 1,395.

மேசை விளக்கு

இரவில் வாசிக்கும்போது, நாம் பயன்படுத்தும் விளக்கு வெளிச்சம் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்குத் தொந்தரவு அளிக்கக் கூடாது என்று நினைப்பவர்களுக்கு இந்த மேசை விளக்கு ஏற்றதாக இருக்கும். 360 டிகிரியில் இந்த விளக்கின் கழுத்துப் பகுதியைத் திருப்பிப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் ஆன்லைன்
விலை ரூ. 499.

மரத்தட்டுகள்

மேசை மீது அப்படியே தேநீர் அல்லது காபி கோப்பைகளை வைப்பதற்குப் பதிலாக இந்த மரத்தட்டுகளைப் பயன்படுத்தலாம். தண்ணீரை உறிஞ்சும் தன்மையுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் தட்டுகள் உங்கள் மேசைக் கறைபடியாமல் பாதுகாக்கும். இதன் ஆன்லைன் விலை ரூ. 395.

காற்றைச் சுத்தப்படுத்தும் செடி

உங்கள் மேசை மீது எந்தச் செடியை வைப்பது என்று யோசித்துகொண்டிருக்கிறீர்களா? காற்றைச் சுத்தப்படுத்தும் தன்மைகொண்ட சிலந்திச் செடி அதற்குச் சரியான தீர்வாக இருக்கும். இதன் ஆன்லைன் விலை ரூ. 399.

பளிங்குச் சுவரொட்டி

பழைய மரமேசையைப் புதிதுபோல் மாற்றுவதற்கு இந்தப் பளிங்குச் சுவரொட்டி உதவும். பழையதாகிவிட்டது என்று மரமேசைகளைத் தூக்கிப் போடுவதற்குப் பதிலாக, இந்தப் பளிங்குச் சுவரொட்டியால் புதிதாக மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பளிங்குச் சுவரொட்டியின் ஆன்லைன் விலை: ரூ. 299.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in