

கனி
கோடையின் தாக்கம் தணிந்து மழைக் காலம் தொடங்கியிருக்கிறது. மழையைப் பால்கனியில் இருந்து ரசிப்பது நகர்ப்புறவாசிகளுக்குப் பெரு மகிழ்ச்சித் தரக்கூடிய விஷயம். அதனால், மழையை வரவேற்று ரசிக்க வீட்டின் பால்கனியைத் தயாராக வைத்திருக்க வேண்டியது அவசியம். மழைக்காலத்தை ரசிக்க உதவும் வகையில் பால்கனியை வடிவமைப்பதற்கான சில ஆலோசனைகள்…
கடற்கரைக் குடைகள்
கடற்கரைக் குடைகள், சிறிய பால்கனிகளுக்குப் பயன்படுத்துவதற்கு ஏற்றவை. எளிமையான வடிவமைப்பை விரும்புபவர்களுக்குக் கடற்கரைக் குடைகள் ஏற்றவை. மழைக்காலத்தை பால்கனி குடைக்குள் இருந்து ரசிப்பது நல்ல அனுபவமாக இருக்கும்.
கூரைகள்
உங்களது பால்கனி திறந்தவெளி பால்கனியாக இருந்தால், மழைக்காலத்தை ரசிக்கும்வகையில், மேற் கூரைகளை (Awnings) அமைக்கலாம். இந்தக் கூரை பால்கனியின் தோற்றத்தைப் புத்தம்புதிதாக மாற்றிவிடும்.
பிரெஞ்சு ஜன்னல்கள்
பால்கனி அமைப்பதற்கு இட வசதியில்லை என்றால், வீட்டின் ஜன்னல்களை பிரெஞ்சு ஜன்னல்களாக மாற்றலாம். இந்த ஜன்னல்களின் வடிவமைப்பு மழையை ரசிப்பதற்கு ஏற்றது.
திரைச்சீலைகள்
பால்கனி வடிவமைப்புக்கு பிவிசி திரைச்சீலைகள், ரீட்ராக்டபிள் ஷட்டர் (Retractable shutter) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இவை மழைக்காலத்தை ரசிப்பதற்கு ஏற்றவை. பல்வேறு வண்ணங்களிலும் பிவிசி திரைச்சீலைகள் கிடைக்கின்றன.
கண்ணாடிச் சுவர்
பால்கனியை வடிவமைப்பதற்கு வழக்கமாகப் பயன்படுத்தும் பாரம்பரியமான இரும்பு வரிசைக் கம்பிகளுக்குப் பதிலாக, கண்ணாடிச் சுவரை வடிவமைக்கலாம். இந்தக் கண்ணாடிச் சுவர் மழையை ரசிப்பதற்குப் பொருத்தமான தேர்வாக இருக்கும்.
அறைக்கலன்கள்
பால்கனியில் பயன்படுத்துவதற்கு வெளிப்புற அறைக்கலன்கள் ஏற்றவையாக இருக்கும். மழைக்காலத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற அறைக்கலன்களாகத் தேர்வுசெய்வது வாங்கினால், அவற்றைப் பராமரிப்பது எளிமையானதாக இருக்கும்.