

கைப்பிடிக்குள் உலகம் வந்துவிட்டது. முன்பு கணிப்பொறியின் மெளஸை வைத்துதான் இந்த வார்த்தை வழக்கத்தில் இருந்தது. ஆனால் இன்று கைப்பேசிக்குள் வந்துவிட்டது உலகம்.
பேருந்தில், ரயிலில், விமானத்தில், திரையரங்கில் முன்பதிவு செய்ய வேண்டுமா, அந்த ஊருக்கும் இந்த ஊருக்கும் எவ்வளவு தொலைவு எனத் தெரிய வேண்டுமா, வெளிநாட்டுப் பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா, நொடிக்கு நொடிக்கான செய்திப் பதிவுகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமா? இவை எல்லாவற்றையும் உங்கள் கையடக்க ஸ்மார்ட் போன் மூலம் நிறைவேற்றிவிட முடியும். அதனால்தான் எல்லா நிறுவனங்களும் ஸ்மார்ட் போன் அப்பிளிகேஷன்களை அறிமுகப்படுத்திவருகின்றன.
அந்த வகையில் ரியல் எஸ்டேட் துறை தொடர்பான உள்ள நிறுவனங்களும் புதிய அப்ளிகேஷன் சாஃப்வேட்கர்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த அப்பளிகேஷன் மூலம் நீங்கள் இருந்த இடத்தில் இருந்துகொண்டே உங்களுக்கான வீட்டை எளிதாகத் தேட முடியும்.
எந்தப் பகுதியில், எந்த விலைக்குள் வேண்டும் என இந்த அப்ளிகேஷன்கள் மூலம் நீங்கள் உங்கள் கனவு இல்லத்தைக் கண்டறிய முடியும். வாடகை வீட்டைத் தேடுவதற்கான வாய்ப்பும் இந்த அப்ளிகேஷன்களில் உண்டு. உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்கள் தேடலை மேம்படுத்தி எளிதாக உங்கள் இலக்கை அடைய முடியும். உதாரணமாக ஒரு படுக்கையறை வீடு என்றால் அதை மட்டும் தேர்வுசெய்து, தரகர் இல்லா வீடு என்றால் ‘Individual’ என தேர்வுசெய்ய வேண்டும். இறுதியாகத் தேடலை அழுத்தினால் உங்கள் விருப்பத்திற்கு உகந்த வீடுகளின் முடிவுகள் வரும். இந்திய அளவில் பிரபலமான அப்ளிகேஷன்களில் சிலவற்றை இங்கே தருகிறோம்.
ஹவுஸிங்
உலக அளவில் ஆன்லைன் ரியல் எஸ்டேட் துறையில் இயங்கும் இந்த நிறுவனம் இந்தியாவில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. ஜிபிஎஸ் (Global Positioning System-GPS) தொழில்நுட்பத்துடன் இயங்கு இந்த அப்பளிகேஷன் வீடு வாங்க மக்கள் நாடும் முன்னணி அப்ளிகேஷன்களில் ஒன்று.
99ஏக்கர்ஸ்
இந்திய அளவில் பல நகரங்களை இணைத்து இயங்கும் 99ஏக்கர்.காம் இணையதளம் வெகு பிரபலாமனது. உங்கள் வீட்டுத் தேவை குறித்து, இரண்டு படுக்கையறை கொண்டதா, மூன்று படுக்கையறை கொண்டதா என்றால் அதற்குத் தகுதியான வீட்டை சில மணித் துளிகளில் தேடி அடைந்துவிட முடியும்.
காமன்ஃப்ளோர்
2007-ல் சேவையைத் தொடங்கிய காமன்ஃப்ளோர்.காம் அப்ளிகேஷன் இந்தியாவின் பல நகரங்களை இந்தச் சேவைக்குள் இணைக்கிறது. இதில் தேடுதலில் பலவிதமாகத் தகவல்களைக் கொண்டு உங்கள் தேடல்தல்களை எளிதாக்க முடியும். உதாரணமாக ப்ளோர் ப்ளான், வங்கி அனுமதி என எல்லாவற்றையும் தேடல்களின் மூலம் வடிகட்டி உங்களுக்குக்குரிய வீட்டைக் கண்டடைய முடியும்.
மேஜிக்பிரிக்ஸ்
நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு மேஜிக்பிரிக்ஸ் நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த அப்ளிகேஷனில் உள்ள முக்கியமான அம்சம் என்ன்வென்றால் தேடுதலுக்குத் தகுந்த மாதிரியான வீடுகள் வரும்போது நமக்கு தகவல் தெரிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுலேகா
சுலேகா இணையதளம் வழியாக மிகவும் பிரசித்தமானது. ரியல் எஸ்டேட் தேடல் மட்டும் பல்சுவை அப்ளிகேஷனாக இது இருக்கிறது.
இந்தியா ப்ராபர்டி
சென்னையைத் தலைமையிடாமக் கொண்டு இயங்கிவரும் இந்தியா ப்ராபர்டி.காமின் அப்ளிகேஷன் இது. இதில் தேடல் மூலம் 3டி ப்ளானைப் பார்க்க முடியும். வெர்ச்சுவல் டூர் சென்று பார்க்க முடியும்.
தொகுப்பு: விதின்