

பூஜையறையை நவீனமாகவும், புதுமையாகவும் வடிவமைப்பதில் இப்போது பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கி யிருக்கிறார்கள். வீட்டின் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை ஒவ்வொன்றையும் எப்படி உங்கள் ரசனைக்கேற்ப வடிவமைக்கிறீர்களோ அதே மாதிரி பூஜை அறையையும் வடிவமைக்கலாம்.
பெரும்பாலான வீடுகளில் பூஜையறையை அமைக்கத் தனியறை இருக்காது. ஆனால், இடப் பற்றாக்குறை குறையாகத் தெரியாத அளவுக்கு இப்போது பூஜையறைகளை அமைக்க முடியும். தனி பூஜையறைக்கு மாற்றாக பூஜை மண்டபங்கள், பூஜை அலமாரிகள் என பல வழிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட நவீன பூஜையறைகளை வடிவமைத்துத் தருகிறது சென்னை அம்பத்தூரில் இயங்கிவரும் மந்திரா நிறுவனம்.
ஜொலிக்கும் பூஜையறை
பூஜையறை தகதகவென ஜொலிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவை நனவாக்குகிறது மந்திரா நிறுவனம். பூஜைப் பொருட்களில் ஆரம்பித்து விக்கிரகங்கள் வரை பூஜையறை சம்பந்தமான எல்லாவற்றையும் தங்க முலாம் பூசி வடிவமைத்துத் தருகிறது இந்நிறுவனம். தேக்கு மரத்தால் உருவாக்கப்படும் பூஜை மண்டபங்களிலும், பூஜை அலமாரிகளிலும் தங்கமுலாம் பூசப்பட்ட பொருட்களால் வடிவமைத்துத் தருகிறார்கள் இவர்கள்.
“வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்றபடி இந்தப் பூஜையறைகளை வடிவமைத்துத் தருகிறோம். இந்தப் பூஜை யறைகளை வடிவமைக்க ரூ. 900-ல் தொடங்கி ரூ. 8 லட்சம் வரை விலை நிர்ணயித்திருக் கிறோம். வாடிக்கை யாளர்களின் பூஜைப் பொருட்களின் தேர்வு, பூஜை மண்டபத்தின் அளவுக்கு ஏற்றபடி இந்த விலை மாறுபடும். பிரத்யேகமான கோயில் வடிவமைப்புகளிலும் பூஜையறைகளை வடிவமைக்கிறோம்.
தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம், செப்பு போன்ற உலோகங்களின் கலவையில் பூஜைப் பொருட்களைத் தயாரிக்கிறோம். பூஜையறைக்கான மர அலங்காரப் பொருட்கள் அனைத்தும் சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்களைக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன” என்கிறார் மந்திரா நிறுவனத்தின் துணை இயக்குநர் எஸ். தியாகராஜன்.
உலோக அலங்காரம்
வீடுகளைப் பல்வேறு உலோகங்களால் அலங்கரிக்க வேண்டும் என்று விரும்புவர் களுக்கும் பல சேவைகளை வழங்குகிறது இந்நிறுவனம். சுவர் புடைப்புச்சிற்பங்கள், தரைப் புடைப்புச்சிற்பங்கள், சுவர் அலங்காரப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் போன்றவையும் இந்நிறுவனத்தில் கிடைக்கின்றன.
“அலங்கார விளக்குகளில் ஆரம்பித்து டின்னர் செட் வரை எல்லாவற்றையும் விதவிதமான உலோகங்களில் நாங்கள் தயாரிக்கிறோம். இந்தப் பொருட்கள் அனைத்தும் லேக்கர் (Lacquer) ஃபினிஷிங் செய்யப்படுவதால் இவற்றைச் சுத்தம் செய்வதும் எளிது. பல விதமான விளக்குகள், விக்கிரகங்கள், வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள் போன்றவை முந்நூறு ரூபாயில் ஆரம்பித்து இரண்டு லட்சம் ரூபாய் வரை எங்களிடம் கிடைக்கின்றன” என்கிறார் தியாகராஜன்.
மேலும் விவரங்களுக்கு: >http://www.mantragoldcoatings.com/