அழகு தரும் பசுமைக் கூரை

அழகு தரும் பசுமைக் கூரை
Updated on
1 min read

உலகமெங்கிலும் இப்போது பசுமைக் கட்டிடக் கலைக்கு மவுசு கூடிவருகிறது. இதற்காகப் புதுப்புது தொழில் நுட்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இவை ஒருவிதத்தில் முதலீட்டுத் தொகையை அதிகமாக்குகின்றன. ஆனால் வீட்டுக்கு அழகான தோற்றத்தையும் சுற்றுச்சுழலுக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்ததாகவும் ஆகின்றன.

பசுமை வீடுகள் இயற்கைக்கு நெருக்கமாக, அதை தொந்தரவு செய்யாத வகையில் கட்டிடம் கட்டும் முறை. மேலும் வீட்டுக்கு அழகையும் வாழும் மனிதர்களுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கும். இதில் பல வகையான கட்டிட முறைகள் இருக்கின்றன. அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு கட்டிடம் கட்டுவது, இயற்கை ஒளியை, குளிர்ச்சியை மட்டும் பயன்படுத்தும் வகையில் கட்டிடத்தைக் கட்டுவது அதில் ஒன்று. இதுபோன்ற ஒரு முறைதான் பசுமைக் கூரை அமைப்பது.

பசுமைக் கூரை என்பது கூரையின் மீது புல்வெளிகளை அமைப்பதுதான். பசுமைக் கூரைகள் இந்தியாவில் இப்போது பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது. ஆனால் மேலை நாடுகளில் பரவலான பயன்பாட்டில் உள்ளது.

பசுமைக் கூரைகள் அமைக்க கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இரும்புக் கம்பிகளும் பிளாஸ்டிக்குகளும் இந்தக் கூரை அமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை கூரைகளை எளிதாகப் பொருத்த முடியும். சிமெண்ட் இல்லாமல் திருகாணிகள் கொண்டு இணைக்க முடியும். இந்த வகை மேற்கூரைகள் மழை, வெயில் பட்டு பாதிப்படையாத வகையில் தயாரிக்கப்படுகின்றன. அதுபோல எடை தாங்கும் தன்மையும் கொண்டவை.

இது பல வண்ணங்களில், வடிவங்களில் கிடைக்கின்றன. பசுமைக் கூரை அமைத்துத் தர தனியாக நிறுவனங்கள் உள்ளன. இந்த முறையைப் பயன்படுத்தி கூரைகள் அமைக்கும்போது அது வீட்டுக்கு அழகையும் ஆரோக்கியத்தையும் தரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in