தளப் பளபளப்புக்கு ரெட்ரோ ப்ளேட்

தளப் பளபளப்புக்கு ரெட்ரோ ப்ளேட்
Updated on
1 min read

கான்கிரீட் தரைகளைப் புதுப்பொலிவுடன் ஜொலிக்க வைக்கும் புதிய பளபளப்பூட்டும் தொழில்நுட்பம்தான் ரெட்ரோ ப்ளேட் சிஸ்டம். இந்தத் தொழில்நுட்பம் 1996-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க நிறுவனம் ஒன்றுதான் இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தது. கான்கிரீட் தளங்களில் உள்ள குறைபாடுகளை நீக்க இதை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்கள்.

இதில் மூன்று நிலைகள் இருக்கின்றன. முதலில் தளத்தில் உள்ள சிராய்ப்புகளை, கான்கீரிட்டில் உள்ள குறைபாடுகளை கிரைடிங்செய்கிறார்கள். தொழிற்சாலைப் பயன்பாட்டுக்குள்ள வைரக் கூர்முனை கொண்டு இந்த கிரைடிங் செய்யப்படுகிறது. இரண்டாவதாக ரெட்ரோ ப்ளேட்டை நிரப்புகிறார்கள்.

ரெட்ரோ பிளேட் 99-ல் இடம்பெற்றுள்ள வேதிப் பொருட்கள் ஈரத்தன்மையை நீண்ட காலம் நிலைநிறுத்துகின்றன. இதனால் கான்கிரீட் கலவையைக் குலுக்கிவிடுவதற்கான தேவை குறையும். கான்கிரீட் பரப்பில் ஈரம் நிலைநிறுத்தப்படுவதால் கட்டுமானக் கலவை நன்றாக உள்ளிழுக்கப்படும் நிலை ஏற்படுகிறது. கடைசி நிலையில் தளத்தைப் பளபளப்பாக்குவது ஆகும்.

இந்தப் பூச்சு சிராய்ப்புகள் வருவதைத் தடுக்கிறது. தளத்தின் கடினத் தன்மையை அதிகரிக்கிறது. மார்பிள் தரக்கூடிய பளபளப்பைத் தருகிறது. தளத்தை ஒரு போர்வையைப் போல மூடிப் பாதுகாக்கிறது. தூசிகளை அண்டவிடாது. பராமரிப்புக்கு எளிதானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in