

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் கிரீன் வேலீஸ் ஷெல்டர்ஸ் கட்டுமான நிறுவனத்தின் புதிய கட்டுமானத் திட்டமான ‘ராஜ்குரு’ 17,454 சதுர அடியில் வேங்கைவாசலில் கட்டி முடிக்கப்படவுள்ளது. 13 மாடிக் கட்டிடமாகக் கட்டப்படவுள்ள இதில் இரு படுக்கையறை, மூன்று படுக்கையறை வீடுகள் அமையவுள்ளன. 915 சதுர அடி, 1,284 சதுர அடி, 1,300 சதுர அடி ஆகிய பரப்பளவில் வீடுகள் கட்டப்படவுள்ளன. 45.74 லட்சத்திலிருந்து 64.99 லட்சம் வரை அடுக்குமனை விலை இருக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. வரும் டிசம்பரில் இந்தத் திட்டம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஷா ஹோம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம். இது சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் வீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. போரூர், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு அருகில் உள்ள கோலப்பாக்கத்தில் இவர்களது புதிய திட்டமான ‘காயத்ரி’ கட்டப்பட்டுவருகிறது. இரண்டு படுக்கையறை, மூன்று படுக்கையறை கொண்ட வீடுகள் இதில் அமையவுள்ளன. வீட்டின் பரப்பளவு 590 சதுர அடியிலிருந்து 965 சதுர அடி வரையாக உருவாகவுள்ளது. இதன் விலை 26.85 லட்சத்திலிருந்து 43.91 லட்சம் வரை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்புத் திட்டம் அக்டோபர் 2016-ல் குடிபுகத் தயாராகும்.
நடுத்தர மக்களின் பட்ஜெட்டுக்குத் தகுந்தாற்போல் வீட்டுத் திட்டங்களை உருவாக்கிவருகிறது ஆப்டிமா நிறுவனம். அம்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் ஆவடி அருகே பாலேரிபட்டில் ஆப்டிமா அப்கிரேடு என்ற தனது புதிய திட்டத்தை உருவாக்கி வருகிறது. 1.5 படுக்கையறை, 2 படுக்கையறை, 2.5 படுக்கையறை, 3 படுக்கையறை எனப் பல வகையில் வீடுகள் உருவாக்கப்படவுள்ளன. நான்கு மாடியில் 3.72 ஏக்கரில் இந்தக் குடியிருப்புத் திட்டம் உருவாகிவருகிறது. இதில் மொத்தம் 336 வீடுகள் கட்டப்படவுள்ளன. விலை 19.37 லட்சத்திலிருந்து 47.85 லட்சம் வரை இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாலேஸ் கட்டுமான நிறுவனம் தென்சென்னைப் பகுதியான பெரும்பாக்கத்தில் ஆஷிரா என்னும் தனது புதிய கட்டுமானத் திட்டத்தை உருவாக்கிவருகிறது. மேடவாக்கம் - ஓ எம் ஆர் லிங்க் சாலைக்கு மிக அருகில் இந்தத் திட்டம் கட்டப்பட்டுவருகிறது. ஒரு, இரண்டு, மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடுகள் என மொத்தம் 478 வீடுகள் இந்தத் திட்டத்தில் உருவாகவுள்ளன. வீட்டின் பரப்பளவு 550 சதுர அடியில் இருந்து 1,620 சதுர அடி வரை. விலை 20.9 லட்சத்திலிருந்து 67.9 லட்சம் வரை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரும் டிசம்பருக்குள் இந்தக் குடியிருப்புத் திட்டம்குடியேறத் தகுதிபெறும்.
தென்னிந்தியாவின் பேர்பெற்ற இரு சக்கர மோட்டார் வாகனத் தொழிற்சாலையான டிவிஎஸ் குழுமத்தின் டிவிஎஸ் எமெரால்டு ஹெவன் ரியாலிட்டியின் புதிய வீட்டுத் திட்டம்தான் எமெரால்டு கிரீன் ஹில்ஸ். இந்தத் திட்டம் பெருங்களத்தூரில் உருவாகிவருகிறது. 2, 2.5, 3 படுக்கையறைகள் கொண்ட வீடுகள் அமையவுள்ளன. இந்த ஆண்டு ஜூனுக்குள் இந்தத் திட்டம் குடியேறத் தயாராகும் எனச் சொல்லப்படுகிறது. 38. 98 லட்சத்திலிருந்து இங்கு வீடுகள் விற்பனைக்கு உள்ளன.
மேலதிகத் தொடர்புக்கு >https://roofandfloor.com/