புதிய திட்டங்கள்

புதிய திட்டங்கள்
Updated on
1 min read

# ஹால் மார்க் குரூப் சென்னை ஜி.எஸ்.டி. சாலை 6.82 ஏக்கர் பரப்பில் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தை உருவாக்க உள்ளது. இது மகேந்திரா சிட்டிக்கு எதிரில் உருவாகவுள்ளது. 28 லட்சத்தில் இருந்து வீடுகள் விற்பனைக்கு உள்ளன. இவற்றில் ஒரு படுக்கையறை வீடுகள், இரு படுக்கையறை வீடுகளும் அடக்கம்.

# சென்னை அண்ணாநகரில் அமையவுள்ள ஓசான் நிறுவனத்தின் மெட்ரோஸோன் குடியிருப்புத் திட்டத்திற்கு ஆதித்யா பிர்லா குரூப் ரூ.150 கோடி முதலீடு செய்துள்ளது. 42 ஏக்கரில் அமையவுள்ள இந்தக் குடியிருப்புத் திட்டத்தில் இரண்டு, மூன்று, நான்கு படுக்கையறை வீடுகள் அமையவுள்ளன.

# சென்னையை மையமாகக் கொண்டு அமர்பிரகாஷ் டெவலப்பர்ஸ் இரண்டாவது கட்ட குடியிருப்புத் திட்டத்தைத் தொடங்கவுள்ளது. குரோம்பேட்டைக்கு அருகில் இந்தத் திட்டம் அமையவுள்ளது. 2,999 சதுர அடியில் கட்டப்படவுள்ள இந்தக் குடியிருப்பில் ரூ.19 லட்சத்தில் இருந்து வீடுகள் விற்பனைக்கு உள்ளன.

# சென்னையின் அடையாளங்களில் ஒன்று சாந்தி திரையரங்கம். அண்ணாசாலையில் அமைந்துள்ள இந்தத் திரையரங்கம், கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குச் சொந்தமான இந்தத் திரையரங்கம் புதுப்பொலிவு பெறவுள்ளது. சென்னையைச் சேர்ந்த முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான அக் ஷயா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இதைப் பிரம்மாண்டமான வணிக, பொழுதுபோக்கு வளாகமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in