

சீனத் தலைநகர் பீஜிங்கில் அமைந்துள்ள கலைக் கூடக் கட்டிடம்தான் தண்ணீரில் மிதக்கும் முட்டை. 2001-ல் தொடங்கப்பட்டு 2011-ல் முடிக்கப்பட்ட இந்தக் கட்டிடம் சீனக் கட்டிடக் கலையின் ஒரு மைல் கல்லாக விளங்குகிறது.
உருவக அமைப்பில் இந்தக் கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தைச் சுற்றிலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி இருக்கிறது. உயரத்தில் இருந்து பார்க்கும்போது முட்டை ஒன்று நீரில் மிதப்பது போல காட்சியளிக்கும்.
பிரெஞ்சுக் கட்டிடக் கலைஞர் பால் ஆண்ரூ. இவர் சீனாவின் பழமையான கட்டிடக் கலையுடனும் சில புதுமைகளைப் புகுத்தி இந்தக் கட்டிடத்தை வடிவமைத்துள்ளார்.
ஆரம்பத்தில் இந்தக் கட்டிடம் கட்ட 393.7 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டது. ஆனால் கடைசியாக 468.7 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை செலவு பிடித்தது.
வெளியே அமைந்துள்ள முட்டை வடிவக் கூரையின் அளவு கிழக்கில் இருந்து மேற்காக 212 மீட்டரும் வடக்கில் இருந்து தெற்காக 144 மீட்டர் அகலமும் உள்ளது. இதன் உயரம் 46 மீட்டர். கூரை அமைப்பதற்கு 18 ஆயிரம் டைடாணியம் தகடுகள் ஆயிரம் அல்ரா ஒயிட் தகடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆப்ரா ஹவுஸ், காண்சர்ட் ஹால், திரையரங்கம் ஆகிய மூன்று அரங்கங்கள் உள்ளன. இவற்றில் 5452 பேர் அமரலாம். இந்தக் கட்டிடம் சீனாவின் நவீனக் கட்டிடக் கலைக்குச் சான்றாக விளங்குகிறது.