

உலகில் இப்படியும்கூட கட்டிடங்கள் கட்ட முடியுமா என்று பிரமிக்க வைக்கின்றன சில கட்டுமானங்கள். அப்படி கட்டப்பட்ட சில கட்டிடங்களைப் பார்ப்போம்.
போலந்தில் ஸ்யாம்பார்க் என்ற இடத்திற்குச் சென்றால் தலைகீழ் வீடுகளைப் பார்க்கலாம். இவை நிஜ வீடுகள் அல்ல. அதுபோலவே டிசைன் செய்யப்பட்ட டூப்ளிகேட் வீடுகள்.
பபுள் ஹவுஸ் தெரியுமா? ஐரோப்பிய நாடுகளில் இது மிகப் பிரபலம். இப்போது பலரும் இந்த மாதிரியான வீடுகளைக் கட்ட விரும்புகிறார்கள். 1975-ம் ஆண்டில் கட்டப்பட்ட இதை ஹங்கேரி பொறியாளர் ஆண்டி லவாக் என்பவர் வடிவமைத்தார்.
கூம்பு ஒலிபெருக்கி போன்ற வீடு ஒன்று அமெரிக்காவில் உள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் ஹ்யூஸ்டன் என்ற இடத்தில் இந்த வீடு உள்ளது. இதன் பெயர் ‘இன்வெர்ஷன் ஹவுஸ்’.
பழைய மரப் பொருட்களைக் கொண்டு ஒரு வீடு கட்டியிருக் கிறார்கள், ரஷ்யாவில். ஆர்ஹாங்ல்ஸ்க் என்ற இடத்தில் இந்த வீடு உள்ளது, இந்த வீட்டின் பெயர் ‘வுட்டன் ஸ்கைஸ்க்ராப்பர்’. ஜப்பானில் கட்டப்படும் மர வீடுகளை மனதில் கொண்டு கட்டப்பட்ட வீடு இது.
தென் கொரியாவில் சுவியோன் என்ற இடத்தில் கட்டப்பட்ட கழிவறை வீடு இது. உலகக் கழிவறை அமைப்பு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 4,508 சதுர அடியில் இந்த வீடு கட்டப்பட்டது.