

தமக்கெனத் தனி இல்லமோ அடுக்குமாடி வீடோ இருக்க வேண்டும் என்னும் ஆசை எழாத ஆளே இருக்க மாட்டார்கள். எல்லோருக்கும் இந்த விருப்பம் இருக்கவே செய்கிறது.
இந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே அநேகக் கட்டுமான நிறுவனங்களும், மனை விற்பனையாளர்களும் ரியல் எஸ்டேட் துறையில் செயல்படுகிறார்கள்.
ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு வகையில் தனது வாடிக்கையாளர்கள் விருப்பத்தைப் பூர்த்திசெய்து வருகிறது. அப்படியான நிறுவனங்களில் ஒன்று ஜோன்ஸ் பவுண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்.
2002-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இது வாடிக்கையாளர்களின் மனைத் தேவையையும் வீட்டுத் தேவையையும் நிறைவேற்றிவருகிறது.
பொதுவாக மனை வாங்குவதைவிட அதைப் பாதுகாப்பது என்பது கடினமானது எனப் பெரும்பாலோர் நினைக்கிறார்கள். எங்கேயாவது மனை வாங்கிப் போட்டு விட்டு, வீடு கட்ட முயலும்போது அந்த மனையை யாரோ அபகரித்திருக்கும் ஆபத்து பல இடங்களில் நடந்திருக்கிறது என்பது யதார்த்தம்.
ஆனால் தங்கள் நிறுவனம் லேஅவுட் போட்டு விற்கும் மனைகளை குறித்துப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் அதன் நிர்வாக இயக்குநர் ஜோன்ஸ் பவுண்டேஷன்ஸ்.
“எங்கள் மனைகளைப் பொறுத்தவரை சுற்றிலும் காம்பவுண்ட் சுவரெழுப்பி, பாதுகாவலர்கள் உதவியுடன் பாதுகாத்து வருகிறோம். இருபது ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறோம். எனவே பயப்படவே தேவையில்லை” என்கிறார் அவர்.
தங்களது நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குத் தரமான வீடுகளைக் கட்டித் தருவதாகக் கூறும் அவர், வீட்டைக் கட்டிக் கொடுத்ததுடன் தங்கள் கடமை முடிந்தது எனத் தாங்கள் நினைப்பதில்லை என்கிறார்.
ஜோன்ஸ் பேசும்போது, “வீட்டில் குடியேறியவர்களுக்கு முதலிரண்டு வருடங்களில் ஏதேனும் பராமரிப்புத் தேவைப்பட்டால் அதையும் இலவசமாக செய்து தருகிறோம்” என்கிறார். வீட்டின் சிறு பாகங்கள் பழுது பட்டால் அதை மாற்றித் தருவதாகவும் அவர் மேலும் கூறுகிறார். நம்பிக்கையோடு வரும் வாடிக்கையாளர்களைப் புன்னகையோடு அனுப்புவதே தங்களின் நோக்கம் என்று உற்சாகமாகச் சொல்கிறார் ஜோன்ஸ்.
- கே.