

# இந்தியாவின் முன்னணிக் கட்டுமான நிறுவனமான ஹிரானந்தானி டெவலப்பர்ஸ் இன்னும் சில மாதங்களில் சென்னையிலும் மும்பையிலும் இரு டவுன்ஷிப் திட்டங்களைத் தொடங்கவுள்ளனர். இதன் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய். சென்னையில் அமையவிருக்கும் இந்த டவுன்ஷிப் திட்டம் 157 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
# டெல்லியைச் சேர்ந்த அஸியானா ஹவுசிங் நிறுவனம் சென்னையில் ரியல் எஸ்டேட் சந்தையில் கால் பதிக்கவுள்ளது. சென்னையைச் சேர்ந்த எஸ்கபேட் நிறுவனத்துடன் இணைந்து சென்னை ரியல் எஸ்டேட் சந்தையில் ஈடுபடவுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து செங்குன்றத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் தங்கள் திட்டத்தைத் தொடங்கவுள்ளன.
# இந்தியா உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் ஜோன்ஸ் லாங் லசல்லே (ஜேஎல்எல்) நிறுவனம் சென்னையில் இரு இடங்களில் தங்களது குடியிருப்புத் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது. ஓ.எம்.ஆர். சாலையில் கோவிலம்பாக்கத்தில் ஒரு திட்டமும், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் ரிங் ரோடில் ஒரு திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளன.
# சென்னையை மையமாகக் கொண்ட காஸா கிராண்ட் நிறுவனம் சென்னைப் பெரும்பாக்கத்தில் 7 ஏக்கர் பரப்பில் மிகப் பெரிய வீட்டு வசதித் திட்டத்தைத் தொடங்கவுள்ளது. 420 குடியிருப்புகள் அமையவுள்ள இந்தத் திட்டம் சோழிங்கநல்லூர் ஐடி பகுதிக்கு அருகில் அமையவுள்ளது. இதன் விலை ரூ.40 லட்சத்தில் இருந்து 60 லட்சம் வரை.