தரைகள் பளபளக்க...

தரைகள் பளபளக்க...
Updated on
1 min read

தரை அமைப்பதில் பல விதமான முறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ரெட்ரோ பிளேட் (Retroplate). எந்த அளவுக்குப் பளபளப்புக் கொண்டதாக இருக்க வேண்டுமோ அதற்கேற்ற வகையில் தேய்த்துப் பளபளப்பாக்கலாம். இதன் மூலம் தரையின் தேய்மானத்தைக் கட்டுப்படுத்த முடியும். உராய்வுகளால் ஏற்படும் சேதமும் குறையும். அதுபோல ரெட்ரோ பிளேட் உபயோகிப்பதால் தரையின் பிரதிபலிப்புக் கூடும். இதனால் அதிக அளவில் மின்விளக்குகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ரெட்ரோ பிளேட்டில் உள்ள வேதிப் பொருட்கள் தரையின் ஈரத்தன்மையை நீடிக்கச்செய்கிறது.

அதேபோல் இதில் மிகக் குறைந்தபட்சப் பராமரிப்பே போதுமானதாக இருக்கும். கறைகள் படிந்தாலும் எளிதில் சுத்தப்படுத்த முடியும். இதனால் தரைகள் எப்போதும் பளபளவென்று மினுங்கும். நீண்ட கால உழைப்பையும் கொண்டது. மேலும் இவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. உடலுக்கும் நல்லது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in