பயன்மிகு ஃபோமிங் கற்கள்

பயன்மிகு ஃபோமிங் கற்கள்
Updated on
1 min read

சுற்றுச் சுழல் சீர்கேடு, மண் தட்டுப்பாடு போன்ற பல காரணங்களால் இன்று செங்கற்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. அதற்கு மாற்றாகப் பலவிதமான மாற்றுச் செங்கற்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் ப்ளாக் (Cellular Lightweight Concrete Blocks).

தயாரிக்கும் முறை

இதன் தயாரிப்பில் பயன்படும் பிரதான இயந்திரங்கள் மிக்ஸர் கிரைண்டரும் ஃபோம் ஜெனரேட்டரும் ப்ளே ஆஷ், சிமெண்ட், ஃபோமிங் ஏஜண்ட் (இது தாவர எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படுகிறது) ஆகியவை இந்தக் கற்கள் தயாரிப்பில் முக்கியமான பகுதிப் பொருள்கள். ஃபோமிங் ஜெனரேட்டரில் உருவாக்கப்பட்ட ஃபோமிங் உடன் ப்ளே ஆஷ், சிமெண்ட் ஆகியவற்றை மிக்ஸர் கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும். சில மணி நேரங்களுக்குப் பிறகு கடினமான இந்தக் கலவை உருவாகும். இப்படி உருவாகும் இந்தக் கலவையை அச்சுகளில் ஊற்றி உலர்த்தவிட வேண்டும். போதுமான நேரம் உலர்ந்த பிறகு கற்களை அச்சுகளில் இருந்து பிரிக்க வேண்டும்.

இது ஜெர்மன் தொழில்நுட்பமான ‘Neopor’ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பெரிய கட்டிடப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் ப்ளாக் உற்பத்தி இயந்திரங்களைத் தனியாக வாங்கித் தயாரிக்கும். இவை இல்லாமல் சிறு சிறு கட்டிடப் பணிகளுக்காக இவ்வகைக் கற்கள் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.

இந்தக் கற்கள் மற்ற மாற்றுச் செங்கற்களைக் காட்டிலும் மிகுந்த பயன்பாடு கொண்டவை. இது அதிகப் பளு தாங்கும் திறன் கொண்டது. அதுபோல வெப்பத்தைக் கடத்தும் திறனும் மிகக் குறைவு. அதனால் வீட்டுக்குக் கோடைக்காலத்திலும் குளுமையைத் தரும். தீயைக் கடத்தும் பண்பும் மற்ற மாற்றுக் கட்டுமானக் கற்களுடன் ஒப்பிடும்போது குறைவு. இன்னொரு முக்கியமான பயன் இது அளவில் பெரியது. ஆனால் உறுதியானது. எடையும் குறைவு. மேலும், இந்தக் கற்களைக் கட்டுமானப் பணிகளுக்கு உபயோகிக்கும்போது கட்டுமானப் பண்இகளை விரைவாக முடிக்க வேண்டும். கட்டுமானத்தின் மொத்த செலவுகளில் 20 சதவிகிதம்வரை மிச்சமாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in