அழகு தரும் விளக்கு தாங்கிகள்

அழகு தரும் விளக்கு தாங்கிகள்
Updated on
1 min read

வீட்டை அலங்கரிப்பதில் விளக்குகளுக்கு முக்கியப் பங்குண்டு. அதிலும் விளக்கு தாங்கிகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு. ஆங்கிலத்தில் இதை lamp shade என்கிறார்கள். அதாவது விளக்குகளை இதற்குள்தான் பொருத்துவார்கள். இந்த லேம்ப் ஷேடின் தன்மைக்கு ஏற்ப விளக்குகள் நமக்கு ஒளி தரும். அதாவது நேரடியாக ஒளி தராமல் இந்த லேம்ப் சேடுகளின் வண்ணம் வடிவமைப்பைப் பொறுத்து இவை ஒளி தரும். உதாரணமாக மஞ்சள் நிறம் கொண்ட லேம்ப் சேடில் பொருத்தப்பட்டுள்ளா விளக்குகள் ஓரளவுக்கு அந்தத் தன்மையுடன் ஒளி வீசும். மேலும் அதன் மேற்புறத் தோற்றம் வீட்டுக்குப் புதிய அழகையும் பெற்றுத் தரும். அதனடிப்படையில் விளக்குகளில் பல வகை உண்டு.

மெட்டீரியல் லேம்ப் ஷேடு

இவ்வகை லேம்ப் ஷேடு, பெரும்பாலும் துணி அல்லது காகிதம் போன்ற பொருளைக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. இவை அல்லாமல் உலோகம், கண்ணாடி போன்ற பொருள்களைக் கொண்டும் இவை வடிவமைக்கப்படுகிறது. ஆனால் துணி, காகிதத்தால் வடிவமைப்பதுதான் எளிதானதாகவும் விலை குறைவானதாகவும் இருக்கிறது என்பதால் அவைதான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

கூலிங் லேம்ப் ஷேடு

இந்த வகை லேம்ப் ஷேடு வியட்னாமில் வயலில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் வெயில் படாமல் இருக்க அணிந்து கொள்ளும் தொப்பியைப் போன்று வடிவம் கொண்டதால் இந்தப் பெயர் பெற்றது. இந்த வகை லேம்ப் சேடுகள் மேஜை விளக்குகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

மணி வடிவ விளக்குகள்

கோயில் மணியின் வடிவம் போன்று அமைப்பைக் கொண்ட இந்த விளக்குகள் பல்லாண்டுகளுக்கு முன்பிலிந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வடிவம். இவை வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கப் பொருத்தமானவை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in