

எழுத்தாளர்கள், ஓவியர்கள், கவிஞர்கள் போன்ற கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான பாணி இருக்கும். தங்கள் கதைகளில், கவிதைகளில், ஓவியங்களில் அவர்கள் அதை வெளிப்படுத்துவார்கள். இதைப் போல கட்டிடக் கலைஞர்களுக்கும் தனித்த பாணி உண்டு.
இந்தியாவில் சண்டிகர் நகரை உருவாக்கிய பிரெஞ்சுக் கலைஞரான லெ கொபூசியே, கனடா நாட்டைச் சேர்ந்த ஃப்ராங் கெரி, பிரிட்ஜ்கெர் கட்டிடக்கலை விருது பெண் கட்டிடக் கலைஞரான ஷாகா முகமது ஹதித், பசுமைக் கட்டிடக் கலையை உருவாக்கிய அமெரிக்காவின் எஃப்.எல்.ரைட் உள்ளிட்ட பல முன்னணிக் கலைஞர்களின் கட்டிட பாணியை ஓவியங்களாக உருவாக்கியுள்ளார் ஸ்பெயினைச் சேர்ந்த ஃப்ரடெரிக்கோ பாபினோ. இந்த மாதிரி கட்டிடங்களை ஓவியமாக்குவது இவரது தனித்துவமான பாணி. இதுபோன்ற 30 உலகின் புகழ்பெற்ற கட்டிடங்களை ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தியுள்ளார். அந்த ஓவியங்களில் சிலவற்றையும் அதன் மூலக் கட்டிங்களையும் இங்கே ஒளிப்படத் தொகுப்பாகக் காணலாம்.