பழைய வீடுகள், புதிய பாடம்

பழைய வீடுகள், புதிய பாடம்
Updated on
1 min read

நம் வீடுகளை அழகாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று நாமும் எத்தனையோ வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறோம். இருப்பினும், நம் வீடுகளில் நமக்குத் தெரியாமல் சிறு சிறு குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இந்தச் சிறிய குறைபாடுகள் எல்லாம் நம் வீட்டுக்கு விருந்தினராக வருபவர்கள் கண்ணுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ..?

அவர்கள் அந்தக் குறையைச் சுட்டிக் காட்டும்போதுதான், நம்முடைய வீட்டிலிருக்கும் குறைபாடு நம்முடைய கவனத்திற்கு வருகிறது. இப்படி வீட்டில் காணப்படும் சிறு சிறு குறைபாடுகள், பழைய வீடுகளைப் புதுப்பித்து நம் பணத்தை அதில் முடக்க வேண்டாம் என்கிற எண்ணத்தில் விடப்பட்ட குறைபாடுகள், பொருளாதாரச் சிக்கலில் பராமரிப்பு செய்ய முடியாத குறைபாடுகள் என்று எத்தனையோ குறைபாடுகள் பல வீடுகளில் இருக்கின்றன.

இந்தக் குறைபாடுகளால் பாதிப்படைந்த வீடுகள் தங்கள் அழகிய தோற்றத்தை இழந்துவிடுகின்றன. இம்மாதிரி வீடுகளை ஓர் இணையதளம் காட்சிப்படுத்துகிறது.

இந்த இணையதளத்தில் கலை (Art), தூய (Attic), பின் முற்றம் (Back Yard), மோசமான வாகன நிறுத்தம் (Bad Parking), அடித்தளம் (Basement), குளியலறை (Bathroom), படுக்கையறை (Bedroom), முன்பும் பின்பும் (Before & After), பேழைகள் (Cabinets), உட்கூரை (Ceiling), உட்கூரை விசிறி (Ceiling Fan), இரைச்சல் (Clutter), ஓர வரிசைக்கல் மேல் முறையீடு (Curb Appeal), பத்தாண்டுக் கால அளவிலான வடிவமைப்புகள் (Design Through the Decades), உணவு அறை (Dining Room), அழுக்கு, தூசு மற்றும் கழிவுப் பொருள் (Dirt, Dust, & Filth), காரையில்லாச் சுவர் சேதம் (Drywall Damage), நுழைவு (Entry), போலியான தாவரங்கள் மற்றும் பூக்கள் (Fake Plants & Flowers), குடும்ப அறை (Family Room), வேலி அல்லது சுவர் (Fence or Wall), நெருப்புச் சேதம் (Fire Damageபோன்ற பல வகைத் தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவற்றில் பத்தாண்டுக் கால அளவிலான வடிவமைப்புகள் எனும் தலைப்பின் கீழ் பத்தாண்டு கால அளவுகள் வாரியாகத் துணைத் தலைப்புகளும், தளமிடல் எனும் தலைப்பில் தரை விரிப்பு (Carpet), விரிப்புகள் (Rugs) மற்றும் ஓடு (Tile) எனும் துணைத் தலைப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.

இத்தலைப்புகளில் சொடுக்கினால், தலைப்புடன் தொடர்புடைய வீட்டின் பகுதிகளில் இடம்பெற்றிருக்கும் குறைபாடுகளை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட ஒளிப் படங்கள் பல இணைக்கப் பட்டிருக்கின்றன. இந்த ஒளிப் படங்கள் நம் வீட்டில் என்னென்ன குறைபாடுகள் வரக்கூடும் என்பதை நமக்குக் காண்பிக்கக் கூடியதாக அமைந்திருக்கின்றன.

நம் வீட்டிலுள்ள குறைபாடுகளை முன்பாகவே கண்டறிய உதவும் விதமாகப் பல்வேறு தலைப்பிலான ஒளிப்படங்களைக் கொண்டிருக்கும் இந்த இணையதளத்திற்கு http://uglyhousephotos.com/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்திச் செல்ல்லாம்.

- தேனி. மு.சுப்பிரமணி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in