ஸ்டார்ட் அப் இன்டக்ஸ்: வீட்டு விலை குறையுமா?

ஸ்டார்ட் அப் இன்டக்ஸ்: வீட்டு விலை குறையுமா?
Updated on
1 min read

ஒரு நாட்டில் எத்தனை வீடுகள் கட்டப்படுகின்றன? வீடுகள் கட்டும் எண்ணிக்கை குறைந்துள்ளனவா? அதிகரித்துள்ளனவா? என்பதைக் கணக்கிடும் முறை ஸ்டார்ட்அப் இன்டக்ஸ் குறியீடு.

கனடா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இந்த முறையின்படி வீடுகள் கட்டப்படுவது கணக்கிடப் படுகிறது. இந்த நாடுகளுக்கு அடுத்தபடியாக ஏழாவதாக இந்தியா இந்தக் கணக்கீட்டு முறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. இந்தக் கணக்கீட்டு முறையின்படி இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய வீட்டு வசதி அமைச்சகமும் இணைந்து இந்தக் குறியீட்டைத் தயாரித்து வருகின்றன. இந்தக் கணக்கீட்டு முறையை ஆரம்ப கட்டமாக 27 முக்கிய நகரங்களில் அறிமுகப் படுத்தியுள்ளது.

இதன்படி ஒவ்வொரு ஆண்டும் புதிய வீடுகள் புதிய குடியிருப்புகள் கட்டப்படும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 300 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளைக் கட்டுவதற்குச் சம்பந்தப்பட்ட துறைகளால் வழங்கப்படும் அனுமதிகளின் எண்ணிக்கை போன்ற தகவல்களும் முறையாகத் திரட்டப்படுகின்றன. இந்தத் தகவல்கள் ஒவ்வொரு ஆண்டிலும் நான்கு காலாண்டு களுக்கான தகவல்களாகப் பிரிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு நகரத்தில் வீடுகள், குடியிருப்புகள் கட்டப்படுவதன் எண்ணிக்கை எப்படி உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இது மற்ற தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஆய்வு போல அல்லாமால் நம்பகத்தனமை கொண்டதாக இருக்கும். இம்மாதிரி ஒரு நகரத்தில் கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கைகளைக் காட்டும் குறியீட்டு எண்தான் ஸ்டார்ட்அப் இன்டக்ஸ்.

சரி இந்தக் குறியீடால் நமக்குச் சில நன்மைகள் இருக்கின்றன. அதாவது அதிக அளாவில் வீடுகள் கட்டப்படுகின்றனவா என்பதை இந்தக் குறியீடு மூலம் அறிந்துகொள்ள முடியும் என்பதால் குறிப்பிட்ட நகரத்தில் வீட்டுத் தேவையை அறிந்துகொள்ள முடியும். உதாரணமாகச் சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு வீடுகள் கட்டப்படுவது குறைந்தது.

ஆக ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகள் விற்கப்படாமல் இருக்கலாம் என ஒரு முடிவுக்கு வரலாம். அதனால் வீட்டுக்கான தேவை இல்லை எனப் புரிந்துகொள்ள முடியும். இதனால் பொய்யாக உருவாக்கப்படும் கிராக்கியைத் (Demand) தவிர்க்கலாம். வீட்டின் எண்ணிக்கை குறையும்போது அதன் விலை சரியும் என்பதும் நிச்சயம். மேலும் இந்தக் குறியீட்டு எண்ணைச் சுட்டி உங்களால் பேரம் பேசவும் முடியும்.

ஏற்கனவே தேசிய வீட்டு வசதி வங்கி சார்பில் வெளியிடப்படும் ‘ரெசிடக்ஸ்’ என்ற குறியீடு குறிப்பிட்ட காலத்தில் வீடுகள் விலை உயர்ந்ததா அல்லது சரிந்ததா என்பதை மட்டுமே காட்டுகிறது. ஆனால், ஸ்டார்ட்அப் இன்டக்ஸ் அடுத்து வர இருக்கும் மாதங்களில் சந்தை எப்படி இருக்கும்? விலை குறையுமா அதிகரிக்குமா என்பதையும் சுட்டிகாட்டக்கூடியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in