மூன்றாவது வீட்டுக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

மூன்றாவது வீட்டுக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?
Updated on
1 min read

உண்ண உணவு, உடுத்த உடை என்ற அடிப்படைத் தேவைகளில் நாம் அடுத்து வைத்திருப்பது தங்கும் இடத்தை, அதாவது வீட்டை. ஆனால் இந்த மூன்றாவது அடிப்படைத் தேவை நமக்குக் கிட்டுவது என்பது கனவுதான்.

அந்தக் கனவு சிலருக்கு மட்டும்தான் கைகூடும். அதுவும் வங்கிகள் கொடுக்கும் வங்கிகள் கொடுக்கும் கடனாலேயே இவை சாத்தியப்படும். சரி வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டிவிட்டோம். நம் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டனர். அவர்களுக்குத் தனியாக வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். அதனால் மீண்டும் வீட்டுக் கடன் வேண்டி விண்ணப்பிக்கிறீர்கள். அப்போது அந்த இரண்டாவது வீட்டுக்கு கடன் கிடைக்குமா?

வீடு என்பது நமது அவசியமான அடிப்படைத் தேவையாக இருப்பதால்தான் வீடு கட்டவும் வாங்கவும் வங்கிகள் கடன் அளிக்கின்றன. அதனால் நீங்கள் முதன் முதலாக வீடு கட்ட கடன் கொடுப்பதில் வங்கிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதற்காக இரண்டாவது வீடு கட்ட வங்கிகள் கடன் கொடுக்காமலும் இல்லை. தனது வாரிசுகளுக்காக இன்னொரு வீட்டைக் கட்ட நினைப்பது தவிர்க்க முடியாத விஷயம்தான். அதனால் இரண்டாவது வீடு கட்டவும் வங்கிகள் கடன் அளிக்கும்.

ஆனால், மூன்றாவது வீடு வாங்குவதற்கு நாம் வீட்டுக் கடன் கோரி விண்ணப்பிக்கும் போது, அதை வங்கிகள் வீட்டுக் கடனாகக் கணக்கில் கொள்வதில்லை. லாப நோக்கத்திற்காக கட்டிடம் கட்டக் கடன் கோருவதாகவே வங்கிகள் அதை எடுத்துக்கொள்ளும். அதனால் அது வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் வராது.

அதாவது மூன்றாவது வீட்டுக்காக நீங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பித்தால் அது வணிகக் கடனாகவே கருதப்படும். வணிகக் கடனுக்குரிய வட்டி விகிதத்தையே வங்கிகள் இந்தக் கடனுக்கும் விதிக்கும்.

நீங்கள் கட்ட இருப்பது வீடாகவே இருந்தாலும் வங்கிகள் அதை வணிக நோக்கத்துக்காகக் கட்டப்படும் கட்டிடமாகக் கொள்ளும் என்பதுதான் அதற்குக் காரணம். மேலும் வீட்டுக் கடனுக்கு அளிப்பது போல் தவணைகளும் நீண்ட காலத் தவணைகளாக இந்தக் கடனுக்குக் கிடைக்காது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in