

திருட்டு பயம் வந்தபோதுதான் கதவுகள் வந்தன. ஆனால் கதவுகள் வீட்டைப் பாதுகாப்பதற்கானவை மட்டுமல்ல. ஒரு கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பவை. ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு விதமான கலாச்சாரங்கள் உள்ளன. அவை பல்வேறு விதங்களில் பல்வேறு கலைப் படைப்புகளில் வெளிப்படும். அப்படியான ஒரு ஊடகமாகக் கதவுகள் இருந்திருக்கின்றன.
உதாரணமாகத் தமிழ்நாட்டுக் கட்டிடக் கலையில் செட்டி நாட்டு வீடுகளுக்குப் பெரும் பங்குண்டு. பிரம்மாண்டமான வீடுகளுக்குத் தகுந்தாற்போல் கதவுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
நம்முடைய புராணங்களை வெளிப்படுத்துவதுபோல தெய்வச் சிலைகள் கதவுகளின் நிலைகளைச் சுற்றிச் செதுக்கப்பட்டிருக்கும். அதுபோல பூ வேலைப்பாடுகளும் இருக்கும். கேரளக் கதவுகளும் செட்டி நாட்டுக் கதவுகள் போல வேலைப்பாடுகள் அதிகமாக இருக்கும்.
அதேபோல் பிரெஞ்சுக் கதவுகளில் கூடுதல் மர வேலைப்பாடுகள் இருக்காது. எளிமையாக இருக்கும். ஆனால், இன்றைக்கு இந்த வகைக் கதவுகள்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் பல கதவுகள் குறித்த ஒளிப்படத் தொகுப்பு: