

பலர் சேர்ந்து உட்காரக்கூடிய வகையில் உள்ள இருக்கையை ஆங்கிலத்தில் பெஞ்ச் என்கிறார்கள். இதில் பல வகை உள்ளன. பொதுவாக பூங்கா போன்ற பொது இடங்களில் சாய்மான உள்ள இருக்கைகளைப் பார்த்திருக்கலாம். இதுவும் அந்த வகையைச் சேர்ந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சோஃபாக்கள் மிக அதிகமாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால் இந்த வகை பெஞ்ச் பெரிய அளவில் இல்லாமல் போய்விட்டது. ஆனால் இன்றைக்கு இந்த வகை இருக்கைகள் நவீன உள் அலங்கார வடிவமைப்பில் முக்கியப் பொருளாக ஆகியிருக்கிறது. அவற்றில் உள்ள பல வகை:
மரபான பெஞ்ச்
இது மரபான வடிவமைப்புடனான பெஞ்ச். மரத்தால் உருவாக்கப்படுபவை. வீட்டின் வரவேற்பறைக்கு ஏற்றவை.
ஹால் ட்ரீ பெஞ்ச்
இது வீட்டின் வரவேற்பறையில் பயன்படுத்தக்கூடிய இருக்கை. இதன் மேற்பகுதியில் சட்டைகள் தொங்விட்டுக் கொள்ளலாம். அல்லது வேறு ஏதாவது அலங்காரம் செய்துகொள்ளலாம். இருக்கையில் இருவர் அமர்ந்துகொள்ளக்கூடிய வசதி இருக்கிறது. இந்த வகை இருக்கை பெரும்பாலு மரத்தால் செய்யப்படுவது.
ஸ்டோரேஜ் பெஞ்ச்
இந்த வகை இருக்கைகள் மேற்பகுதியில் அமைந்துகொள்ளும் வசதியுடன் கீழ்ப் பகுதி அலமாரிகளுடனும் இருக்கும். இது பெரும்பாலும் மரத்தால் உருவாக்கப்படுகிறது.
நவீன பெஞ்ச்
இது மரம் மற்றும் இரும்பு போன்ற வேறு பொருளைக் கொண்டு உருவாக்கப்படுபவை. நவீன விதமான வடிவமைப்புடன் இருக்கும்.
லெதர் பெஞ்ச்
இது உபயோகிக்கப்படும் பொருளைப் பொறுத்த வகை. இதுவும் மெத்தை பெஞ்ச் வகையைப் போன்றதுதான். இது அக்ரலிக், பிளாஸ்டிக் போன்ற பல பொருள்களால் செய்யப்படுபவை.
மெத்தை பெஞ்ச்
இது மரபான பெஞ்ச் வகையைச் சேர்ந்தது. ஆனால் உட்காரம் பகுதியில் மெத்தைகள் இருக்கும். இந்த வகை மாடிப் படிகள் முடியும் இடத்தில் உள்ள சிறிய பகுதியில் இடுவதற்குத் தோதானவை. இந்த வகை மரம், இரும்பு போன்ற பல பொருள்களால் உருவாக்கப்படுகிறது.