

நாடகங்கள், இசைக் கச்சேரிகள் இவற்றுக்காகத்தான் முதலில் அரங்கங்கள் கட்டப்பட்டன. உலகத்தின் முதல் அரங்கங்கள் கிரேக்கத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கிரேக்கம் உலகக் கட்டிடக் கலைக்கு முன்னோடியானது. அதுபோல அரங்கங்களுக்கும் அதுதான் முன்னோடியாக இருந்திருக்கிறது. நாடகம் என்னும் வடிவம் திரைப்படமாக வளர்ச்சியடைந்தது. நாடக அரங்கங்கள் இருந்த இடம் சினிமா அரங்கங்களாக மாற்றப்பெற்றன. குறிப்பாகக் கலைகளின் தாயகமான பிரான்ஸ் போன்ற நாடுகளின் பிரம்மாண்டமான அரங்கங்கள் திரையரங்கங்களாக மாற்றி வடிவமைக்கப்பட்டன. இன்று உலகம் முழுவதும் திரையரங்கங்கள் பல்வேறு வடிவங்களில் கட்டப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடத்தகுந்த திரையரங்களின் பட்டியல் இது.
சைன்ஸ் பிக்ஷன் டைன் திரையரங்கம், அமெரிக்கா
ஹாட் டப் திரையரங்கம், இங்கிலாந்து
சைன்ஸ் பிக்ஷன் டைன் திரையரங்கம், அமெரிக்கா
ரெட் ராக் ஆம்பி தியேட்டர், அமெரிக்கா