

அமெரிக்கக் கட்டுமானப் பொறியாளர் அமைப்பு ஆண்டுதோறும் பசுமைக் கட்டிடங்களை ஊக்குவிக்கும் பொருட்டு நாட்டின் சிறந்த பசுமைக் கட்டிடங்களைத் தேர்ந்தெடுத்து வருகிறது. அது இந்தாண்டும் ஏழு கட்டிடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
பசுமைக் கட்டிடங்கள் என்பவை சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு உகந்ததாக உள்ளன என்பதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மின்சார ஒளியை மட்டும் நம்பியில்லாமல் சூரிய ஒளியைச் சாதகமாக உபயோகிப்பது மாதிரி கட்டிட வடிவமைப்பை உருவாக்க வேண்டும்.
அதுபோல கட்டிடக் கழிவுகளை மிகக் குறைந்த அளவாக வைத்திருக்க வேண்டும். பெரும்பாலான கட்டிடக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் விதத்தில் போதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இந்த அம்சங்களைக் கணக்கில் கொண்டு கீழே உள்ள கட்டிடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.