குளியலறைக்கு என்ன டைல்?

குளியலறைக்கு என்ன டைல்?
Updated on
1 min read

இப்போது வீடுகளில் டைல்கள் பயன்படுத்துவது அதிகமாகிவருகிறது. தளங்கள் மட்டுமல்லாமல், படிக்கட்டுகள், குளியலறை எனப் பல இடங்களில் டைல் பயன்படுத்தப்படுகிறது. டைல்கள் பயன்படுத்துவதால் குளியலறை பளபளப்பாக அழகாக இருக்கும். அதேசமயம் அழுக்கு படியாது. ஆனால் வழுக்கிவிழுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

வீட்டில் குழந்தைகள், முதியவர்கள் இருக்கும்பட்சத்தில் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சொரசொரப்பான டைல்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். இதனால் வழுக்குவது தடுக்கப்படும். ஆனால் சொரசொர டைல்களில் உள்ள பாதகமான அம்சம் அதன் சொரசொரப்பு இடுக்குகளில் அழுக்கு சேர்ந்துகொள்ளும். அதை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டி வரும். அதனால் அதிகமாக அழுக்குச் சேராத வகையில் டைல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

குளியலறையின் சுவர்களுக்குப் பளபளப்பான டைல்களைப் பொருத்தலாம். குளிக்கும்போது தெறிக்கும் சோப்பு நுரைகளால் உண்டாகும் கரைகளை எளிதாகத் துடைத்துவிட முடியும்.

மேலும் டைல்களில் சிறு சிறு அழுக்குப் படிந்தாலும் உடனே பர்க்க வசதியாகக் கொஞ்சம் வெளிர் நிற டைல்களைப் பொருத்தினால் பராமரிப்பு எளிதாக இருக்கும். மேலும் குளியலறை என்பது வெளிச்சம் உள்ளே வராத பகுதி முழுக்க முழுக்க மின் விளக்கை நம்பியிருக்கும். அதனால் அடர்நிற டைல்கள் குளியலறையை மேலும் இருட்டாக்கும். அதனால் அத்தகைய டைல்களைத் தவிர்க்கலாம். குளியலறைக்கு டைல்களைத் தேர்ந்தெடுக்கும்போது பாதுகாப்புக்கும் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும் அதிக விலையுள்ள டைல்களைக் குளியலறைக்கு அவசியமல்ல. அதனால் ரூ.50க்குள் தேர்வுசெய்வது கட்டுமானச் செலவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

- யுவா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in