

‘சொந்த வீடு’ இணைப்பிதழை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வாசகர்களிடம் கேட்டிருந்தோம். ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற படிவத்தை ஆர்வத்துடன் பூர்த்திசெய்து ஏராளமான வாசகர்கள் அனுப்பியிருந்தார்கள்.
‘சொந்த வீடு’ இணைப்பிதழில் வெளியாகும் படைப்புகளில் கட்டிடங்களின் வரலாறு, வீட்டுப் பராமரிப்பு, உள் அலங்காரம், ஒளிப்படக் கட்டுரைகள், கட்டிடக் கலைஞர்களின் அறிமுகங்கள், வாசகர் அனுபவங்கள் தொடர்பான கட்டுரைகளை விரும்பிப் படிப்பதாக வாசகர்களில் பெரும்பாலோர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
தொடர்களில் ‘பொருள் புதிது’, ‘கட்டுமானக் கருவிகள்’, ‘பயன்மிகு பொருள்கள்’, ‘சட்டச் சிக்கல்-கேள்வி/பதில் தொடர்’ ஆகியவை வாசகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்ற தொடர்கள்.
சிறிய கட்டுரைகளைப் படிப்பதற்கு விருப்பம் தெரிவித்திருக்கும் வாசகர்கள், அரைப் பக்க ஒளிப்படக் கட்டுரைகளை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
புதிய கட்டுமானப் பொருட்களை அறிமுகப்படுத்தும்போது, அவற்றைத் தயாரிப்பவர்களின் தொடர்பு எண்ணையும் சேர்த்து கட்டுரைகளில் வெளியிட வேண்டும் என்ற யோசனையைச் சில வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் பரிந்துரைகளை ‘சொந்த வீடு’ கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. வரும் வாரங்களில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, உங்கள் வாசிப்புக்கு ‘சொந்த வீடு’ மேலும் சுவை கூட்டும்.