

சி
ரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே நடைபெற்றுவரும் இந்தப் போரால் அப்பாவி குழந்தைகள் பல உயிரிழந்தன.
சமீபத்தில் நடந்த மிகப் பெரிய படுகொலையாக இது பார்க்கப்படுகிறது. இந்தப் போரால் ஏற்படும் மனித இழப்புகளைக் குறித்த புகைப்படங்களைச் செய்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக்கொண்டனர்.
அதுபோல இதுவரை போரால் இடிந்து தரைமட்டமான கட்டிடங்களையும் பகிர்ந்துவருகிறார்கள். இவற்றில் யுனெஸ்கோ அங்கீகரித்த சிரியாவின் ஆறு பாரம்பரியச் சின்னங்களும் அடக்கம்.
பாம்ரயவின் 2000 வருடப் பழமையான ஆர்க் ஆஃப் ட்ரம்ப், ஓல்டு டெம்பிள் ஆஃப் பெல் ஆகிய பாரம்பரியச் சின்னங்களும் போரால் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
சிரியத் தலைநகர் டமஸ்கஸும் பாரம்பரியச் சின்ன அந்தஸ்துபெற்ற நகரம். அங்கும் பல கட்டிடங்கள் போரால் சிதைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒளிப்படங்களின் தொகுப்பு இது.