

வீ
ட்டு வாசலுக்கு, ஜன்னலுக்குத் திரை போடும் வழக்கம் பரவலாக இருக்கிறது. கதவு, ஜன்னல்களைக் காற்றுக்காகத் திறந்துவைக்கும்போது ஒரு தனிமைக்காகத் திரை போட்டுக்கொள்வோம். திரைகள், அறை பிரிப்பானாகவும் பயன்படுகின்றன. அது போன்றுதான் குளியலறையிலும் பயன்படுகின்றன. இன்றைய குளியலறைகள் பல கழிவறை, வாஷ்பேசின் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.
அவற்றை குளிக்கும் பகுதியிலிருந்து பிரிக்கவும் திரைகள் பயன்படுகின்றன. அதனால் குளிக்கும் தண்ணீர் மற்ற பகுதியில் சிதறாமல் இருக்கும். அவற்றில் பல வகை இருக்கின்றன. துணி குளியலறைத் திரை, ப்ளாஸ்டிக் குளியலறைத் திரை, கொக்கி அற்ற திரை ஆகிய மூன்றும் அவற்றுள் பிரதானமானவை.
இது பருத்தி அல்லது பாலியஸ்டரில் தயாரிக்கப்படுபவை. அதனால் சலவைசெய்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதால் ஒருவிதமான ஈரவாடை, பூஞ்சைக் காளன் பிடித்துக்கொள்ள இருக்க வாய்ப்புள்ளது.
இது வினைல் அல்லது பிவிசி பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுபவை. அதனால் இது ஈரத்தை உறிஞ்சாது. அதனால் எளிதில் உலரும் தன்மை கொண்டது. பல வடிவங்களில் கிடைக்கிறது.பலவிதமான வண்ணங்களில் கிடைக்கிறது.
திரைக் கம்பியில் நேரடியாக மாட்டிக்கொள்ளும் வாய்ப்புள்ள திரை இது. கொக்கிகளுக்குப் பதிலகாக திரையில் துளையிட்டால் போதுமானது.