

இரட்டை மெருகூட்டல் (DGU glass) என்பது, வெளியில் இருந்து கட்டிடங்களுக்குள் அல்லது உள்ளிருந்து வெளியே வெப்பம் கடத்தப்படுவதைக் குறைப்பதற்காக உருவாக்கப்படும் கண்ணாடிக் கூட்டுத் தகடு. இது ஒன்றுக்கு மேற்பட்ட கண்ணாடிகளை அவை ஒன்றுக்கொன்று இணையாகவும், அவற்றுக்கிடையே சிறிது இடைவெளி இருக்குமாறும் வைத்துப் பொருத்திச் செய்யப்படுகிறது. பொதுவாக, இவற்றில் மூன்று அல்லது இரண்டு கண்ணாடிகள் பயன்படுகின்றன. இந்த வெப்பக்காப்புக் கண்ணாடிகள் கட்டிடங்களில் சாளரக் (Window) கண்ணாடிகளாகவும், திரைச் சுவர்க் கண்ணாடிகளாகவும் பயன்படுகின்றன.
மேலும், இவ்வகையில் கண்ணாடிகளை ஒட்டுவதற்கு அலுமினியம் அல்லது இரும்புத் தகடு இரண்டு கண்ணாடிகளுக்கு இடையில் பயன்படுத்தப்படும். மேலும், அந்தத் தகடுக்கு உள் பகுதியில் டெசிகண்ட் எனப்படும் ஈரம் உறிஞ்சிகள் பயன்படுத்தப்படுகின்றன இவை மூன்றையும் ஒட்டுவதற்கு சிலிக்கான் எனப்படும் பசை பயன்படுத்தப்படுகிறது இவை பல அடுக்குகளாகவும் குறைந்தபட்சம் 18மி.மீட்டர் முதல் கிடைக்கும்.
ஒற்றைக் கண்ணாடியைப் பயன்பபடுத்துவதால் அவை வெப்பத்தைப் பெருமளவு கடத்தவல்லது. இரட்டைக் கண்ணாடிகளில் இடையே காற்று இருப்பதால் வெப்பம் கடத்தப்படுவது குறைகிறது. வெப்பம் கடத்து திறனை மேலும் குறைப்பதற்காகக் கண்ணாடிகளுக்கு நிறமூட்டுவது, கண்ணாடியின் மேற்பரப்பில் சிறப்புப் பூச்சுகளைப் பூசுவது போன்ற நுட்பங்களும் பயன்படுத்தப்டுகின்றன.
ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா போன்ற வெப்பமான நாடுகளில் வெப்பத்தின் காரணமாக ஏற்படும் தீ விபத்துக்களைத் தடுப்பதற்கு இவ்வகைக் கண்ணாடிகள் பயன்படுகின்றன. துபாய் போன்ற நகரங்களில் பள்ளிக் கூடங்களிலும் இந்தியாவில் வங்கிகளிலும் பள்ளிகளிலும் இந்த வகைக் கண்ணாடிகளைக் காணலாம் .
இந்தக் கண்ணாடிகளின் தயாரிப்பு என்பது யாருக்கும் தெரியாத ரகசியமாகவே பல நிறுவனங்கள் வைத்துள்ளன. இந்தக் கண்ணாடிக்குச் சந்தையில் இருக்கும் ஆதரவும் மற்றும் தொழில் நுட்பமே இதற்குக் காரணம். இவை வந்து ஒரு பத்தாண்டுகள் ஆகியிருக்கும். இப்போதுதான் மக்களுக்கு இந்தக் கண்ணாடிகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, இவை 30 நிமிடம் முதல் 180 நிமிடங்கள் வரை தீயில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் வல்லமையைக் கொண்டவை. இவை வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ற அளவுகளில் 5மி.மீட்டர் முதல் 180 மி.மீட்டர் தடிமனில் கிடைக்கின்றன. தீயைத் தடுக்கச் சில நிறுவனங்கள் இதில் ரசாயனத்தைப் பயன்படுத்துகின்றன.