வீட்டை அழகாக்கும் முகமூடி

வீட்டை அழகாக்கும் முகமூடி
Updated on
2 min read

மு

கமூடிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பழக்கத்தில் இருந்துவருகிறது. தொடக்ககாலகட்டத்தில் முகமூடிகள் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டன. வேட்டையிலும், போரிலும் கவசங்களாகவும் முகமூடிகள் பயன்பட்டன.

முகமூடிகள், நிகழ்த்துக் கலைகளிலும் பயன்பட்டன. மனநல சிகிச்சையிலும்கூட முகமூடிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நம்முடைய கலாச்சாரத்தில் அரக்க முகமூடிகள் கண் திருஷ்டிக்காக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த முகமூடிகள் இன்றைய நவீன காலகட்டத்தில் வீட்டு அலங்காரத்துக்கும் பயன்பட்டு வருகின்றன. இதில் பல வகை உள்ளன.

ஆப்பிரிக்கப் பழங்குடியினரின் முகங்கள், அரக்கர்களின் முகங்கள், புத்தரின் தியான முகம், விநாயகரின் யானை முகம் எனப் பல வகையான முகங்களை முகமூடிகளாகச் சுவரில் மாட்டி வீட்டை அழகுபடுத்தலாம்.

இந்த மாதிரி சுவர் அலங்கார முகமூடிகள், மரம், இரும்பு, பித்தளை, மூங்கில் எனப் பலவற்றில் செய்யப்படுகின்றன. இதை வைத்து இந்த முகமூடிகளை அழகுப்படுத்தலாம். 200 ரூபாயிலிருந்து இந்த வகை முகமூடிகள் சந்தையில் கிடைக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in