

ஆண்டுதோறும் சிறந்த கட்டிடங் களைத் தேர்ந்தெடுத்துப் பட்டியலிட்டு வெளியிட்டு வருகிறது ‘ஆர்க்டெய்லி’ என்னும் கட்டுமானத் துறை தொடர்பான இணைய இதழ்.
சிறந்த பொதுக் கட்டுமானம், சிறந்த கலாச்சார மையம், சிறந்த அடுக்குமாடிக் குடியிருப்பு, சிறந்த வீட்டுக் கட்டுமானம், சிறந்த அலுவலகக் கட்டுமானம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் இந்தப் பட்டியல் இடப்படுகிறது. இந்த ஆண்டு உலக அளவில் சிறந்த வீட்டுக் கட்டுமானமாக வியட்நாமில் உள்ள ‘பிரிக் கேவ்’ என்னும் வீடு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
முழுவதும் செங்கற்களால் ஒரு குகைபோல் இந்த வீடு வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் உலக அளவில் சிறந்த பள்ளிக் கட்டுமானமாக இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஒரு கட்டிடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
சாரதா பள்ளிக் கட்டுமானம் அது. மலைபோல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் மேலேயும் மாணவர்கள் நடந்துசெல்ல முடியும். சிறந்த கட்டிடங்களை இந்திய அளவிலும் இந்த இதழ் பட்டியலிட்டுள்ளது/
அதில் சிறந்த வீட்டுக் கட்டுமானம் பிரிவில் முதல் 6 இடங்களைப் பெற்ற கட்டிடங்களின் ஒளிப்படத் தொகுப்பு இது.