

முன்பெல்லாம் மாடிப் படிகள் பெரும்பாலும் மரத்தால்தான் செய்யப்படும். கட்டுமானத் துறை வளர்ச்சி பெற்றுவிட்ட இந்தக் காலத்தில் பலவிதமான பொருட்கள் மாடிப் படிகள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. மரத்தாலான படிக்கட்டுகள் வீட்டின் அழகுக்கு மெருகூட்டும்.
வீட்டுக்கு வெளியில் அமைக்கும் படிக்கட்டுகளை சிமெண்டோ கற்களோ கொண்டு அமைக்கலாம். படிக்கட்டுகளின் அமைப்பைப் பொறுத்தவரை உயரத்தைவிட அகலமாக அமைக்க வேண்டும். படிகளின் உயரம் குறைவாகவும், கால் வைக்கும் பகுதி அகலமாகவும் இருக்க வேண்டும். படிக்கட்டுகள் அழகாக இருப்பதைவிட பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்க வேண்டும்.
குழந்தைகள், முதியோர்கள் எளிதாக ஏறி இறங்க வசதியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல படிக்கட்டுகள் எல்லாம் சம அளவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அடி சறுக்கும்.