

மனிதக் கழிவைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் சாதனம் ஒன்றை லண்டனைச் சேர்ந்த ஸ்பார்க் வடிவமைப்பு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் மின் வசதி எட்டாத இந்திய கிராமங்களுக்கு அந்த வசதி அளிக்கும் வகையில் இந்தச் சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிக் அர்ஸ் டாய்லெட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவி எளிதில் பொருத்தக்கூடியது.
மூங்கில், பயோ பாலிமர் பிசின் ஆகியவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டு 3 டி முறையில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதக் கழிவுகள் மட்டுமல்லாது விலங்குகளின் கழிவு, காய்கறிக் குப்பை ஆகியவற்றையும் இதில் இடலாம். இந்தக் கழிவுகள் மூலம் உருவாகும் வாயுவின் விசையால் இந்தக் கருவியில் பொருத்தப்பட்டுள்ள டர்பைன் சுற்றப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.