

சென்னையின் ரியல் எஸ்டேட் விற்பனை அதிகரித்து வருவதாக சமீபத்தில் வந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தென் சென்னைப் பகுதிகளில் வீடு விற்பனை அதிக அளவில் நடந்துவருவதாகவும் அந்த அறிக்கை கூறியது. மத்திய சென்னை, வட சென்னை பகுதிகளை ஒப்பிடும்போது தென் சென்னை கடந்த பல ஆண்டுகளாகவே வீடு விற்பனையில் முன்னணியில் இருக்கிறது. அதற்குக் காரணம் தென் சென்னையில் கிடைக்கும் அமைதிதான். ஆனால் தென் சென்னைப் பகுதியும் இப்போது பரபரப்பாகிவிட்டது. சென்னையின் பரபரப்பான சாலைகளில் ஒன்றாகிவிட்டது ஓ.எம்.ஆர். சாலை. அதனால் வீடு வாங்குபவர்கள் பலரும் இப்போது ஈ.சி.ஆர். சாலைப் பகுதியில் வீடு வாங்க விரும்புகிறார்கள்.
ஈ.சி.ஆர். சாலை வசதிகள்
ஈ.சி.ஆர். சாலைப் பகுதியில் போக்குவரத்து நெரிசலற்ற பகுதி. அதே நேரம் அத்தியாவசியத் தேவைக்காக விரைவாகச் செல்லும் போக்குவரத்து வசதி கொண்டது.
இந்தப் பகுதியில் கேட்டட் கம்யூனிடி வீடுகள் அதிகம். அதனால் பாதுகாப்பானதுதான்.
தனியார் கடற்கரை மிக அருகில் உள்ளது.
ஈ.சி.ஆர். பிரதான சாலையிலேயே இந்த வில்லாக்கள் அமைந்துள்ளன. பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ளது. கடற்கரைச் சாலைக்கு அருகில் உள்ளதால் வாடகை வருமான வாய்ப்புகளும் இந்த வில்லாக்களுக்கு உண்டு. உணவு விடுதி, அலங்கார நிலையம், கிளப் வசதிகளும் உண்டு. 24 மணி நேரப் பாதுகாப்பு வசதியும் உண்டு.