அசத்தப்போகும் வடிவமைப்புகள்

அசத்தப்போகும் வடிவமைப்புகள்
Updated on
2 min read

புத்தாண்டு என்பது எப்போதும் புதிய கருத்துகள், திட்டங்கள், பார்வைகளைத் தன்னுடன் கொண்டுவரும். வழக்கமாகச் செய்துகொண்டிருக்கும் ஒரு விஷயத்தை மாற்றுவதற்கான உத்வேகத்தைக் கொடுக்கும். அதில், வீட்டைப் புதுமையான தோற்றத்தில் மாற்றுவது முக்கியமாக இடம்பெறும். ஒவ்வோர் ஆண்டும் வடிவமைப்பில் புதுமையான போக்குகள் அறிமுகமாகும். அந்த வகையில், இந்த ஆண்டும் சில புதுமையான வடிவமைப்புக் போக்குகள் அசத்தப்போவதாக உள்அலங்கார வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 2019-ம் ஆண்டில் பிரபலமாக இருக்கப்போகும் வடிவமைப்புப் போக்குகள் என்னென்ன?

> கைவினை அறைக்கலன்கள், உள்ளூர் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வடிவமைப்புகள், வண்ணங்கள், தனி மனிதர்களின் ரசனை போன்ற அம்சங்கள் இந்த ஆண்டில் ஆதிக்கம் செலுத்தவிருக்கின்றன.

> இயற்கையின் கூடுதல் தாக்கத்துடன் அறைக்கலன்கள் வடிவமைக்கப்படவிருக்கின்றன. உயர்தள பளபளப்பு உலோக நிறமும் (High-gloss metal accent) இந்த ஆண்டில் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே ஒரு கலைப் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வடிவமைப்புப் போக்கு சுவரொட்டிகள் போன்ற அம்சங்களில் பிரதிபலிக்கும். இந்த ஆண்டின் வண்ணமாகப் பவளம் சிறப்பாகச் செயல்படும்.

> இந்த ஆண்டு அறைக்கலன்கள் பெரிய வடிவங்களில் வடிவமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உருண்டையான, வளைவான வடிவங்களாலான நாற்காலிகள், சோஃபாக்கள் இந்த ஆண்டின் போக்காகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

> பூமியைப் பிரதிபலிக்கும் வண்ணங்களும் இந்த ஆண்டில் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கின்றன. உட்புறம், வெளிபுறம் இரண்டையும் உடைக்கும் திறந்தவெளி இடங்கள் வீட்டின் வடிவமைப்பில் முக்கியத்துவம் பெறும். இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கு உதவும் வடிவமைப்புப் போக்குள் இந்த ஆண்டில் அதிகமாகப் வர இருக்கின்றன.

> தனி மனிதர்கள் தங்கள் ரசனையை வெளிப்படுத்தும்படியாகவும்,  மனித மனங்களை இணைக்கும் கலைப்பொருட்கள், அழகியல் அம்சங்கள் போன்றவையும் இந்த ஆண்டில் பிரபலமடைக்கூடும்.

> அடர்நிறங்கள் வீட்டின் சுவர்களையும் கூரைகளையும் இந்த ஆண்டு அலங்கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

> இந்த ஆண்டில் நிலைதன்மையை முன்வைக்கும் ஆற்றல்திறன்வாய்ந்த விளக்குகள் அதிகமாகப் பயன்படுத்தப்படும். இந்தப் போக்கு கட்டிடக் கலையின் நேர்மறையான போக்காகப் பார்க்கப்படுகிறது.

> சூழல்பொறுப்பு நிறைந்த இடங்களை உருவாக்குவதும் இந்த ஆண்டின் பிரபலமான போக்காக இருக்கும். இது வீடுகளில் பொறுப்பான வடிவமைப்பை 2019-ம் ஆண்டில் உருவாக்குவதற்கு வழிவகுக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in