லண்டனில் சொத்து குவிக்கும் இந்தியர்கள்

லண்டனில் சொத்து குவிக்கும் இந்தியர்கள்
Updated on
1 min read

மத்திய லண்டனில் சொத்து வாங்கும் வெளிநாட்டுக் காரர்களில் இந்தியர்களே முதலிடம் பெறுவதாக CBRE என்னும் ரியல் எஸ்டேட் துறை ஆய்வு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய லண்டனில் கிட்டத்தட்ட 40 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு இந்தியர்கள் முதலீடு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டாவது காலாண்டில் இந்தியர்கள் 55 சதவீதம் பங்குகளை வாங்கியிருக்கிறார்கள்.

பெரிய வணிக வளாகங்கள் வாங்குவதிலும் இந்திய நிறுவனங்களின் கையே ஓங்கி இருப்பதாக அந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய லண்டனின் முக்கியப் பகுதியான மேஃபேர் பகுதியில் ஹேஙோவர் ஸ்கொயரில் இந்திய நிறுவனமான இண்டியா புல்ஸ் சொத்து வாங்கியுள்ளது. இது ஆக்ஸ்ஃபோர்டு சர்கஸுக்கு அருகில் உள்ள பகுதி. இந்தன் விலை 26 கோடி அமெரிக்க டாலர் என CBREயின் அறிக்கை தெரிவிக்கிறது. இதுமட்டுமல்லாமல் அருகிலேயே நியூகோர்ட் பகுதிக்கு அருகில் இன்னொரு சொத்து ஒன்றும் இந்திய நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது. கேரே தெருவில் 150 கோடி அமெரிக்க டாலர் விலையுள்ள ஒரு சொத்தை மும்பையைச் சேர்ந்த லோதா டெவலப்பர்ஸ் என்னும் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த இரு சொத்துகளும் செகுசு வீடுகளாக உருவாக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முதலீட்டு நிறுவனங்கள் மத்திய லண்டன் பகுதியில் ஆர்வத்துடன் முதலீடுசெய்து வருகின்றன. லண்டனில் நிலவும் சாதகமான ரியல் எஸ்டேட் சந்தையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள

இந்திய நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன. லண்டன் வாழ் இந்தியர் களுக்கும் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இது நல்ல வாய்ப்பு. லண்டன் பொருளாதாரம் சமநிலை அடையும் என அத்துறை நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்த இரண்டாவது நிதியாண்டில் லண்டனில் நிலம் வாங்குவது தொடர்ந்து அதிகரித்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தேக்க நிலையில் இருந்த லண்டன் ரியல் எஸ்டேட் ஏறுமுகம் கண்டிருக்கிறது. முடிவடைந்த காலாண்டில் 13 சதவீதம் நிலம் வாங்குவது அதிகரித்துள்ளது. 14 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு நிலங்கள் கைமாற்றப்பட்டுள்ளன.

இந்த முன்னேற்றம் லண்டனின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, ரியல் எஸ்டேட் துறையும் பொருளாதாரமும் வளம் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in