Last Updated : 04 Aug, 2018 10:48 AM

 

Published : 04 Aug 2018 10:48 AM
Last Updated : 04 Aug 2018 10:48 AM

படங்களில் வாழ்பவர்கள்

வீட்டை அலங்கரிக்கும் வழக்கங்களுள் ஒன்று, சுவரில் ஒளிப்படங்களை மாட்டுவது. பத்திருபது வருஷங்களுக்கு முன்பு எல்லார் வீட்டுகளிலும் ஒளிப்படங்கள் கண்டிப்பாக இருக்கும். அந்தக் குடும்பத்தின் முக்கியமான நிகழ்வுக்குச் சாட்சியாகவும் அடுத்த தலைமுறைக்கு முந்தைய தலைமுறையை அறிமுகப்படுத்தும் விதமாகவும் அவை மாட்டப்பட்டிருக்கும். இடையில் ஒளிப்படங்கள் மாட்டும் வழக்கம் சற்று குறைந்துபோனது. இப்போது மீண்டும் புதிய பாணியில் வந்திருக்கிறது. ஒளிப்படங்களை ‘குடும்பச் சித்திரம்’ (Family Tree) பாணியில் மாட்டிவைக்கலாம்.

இப்படியான குடும்பச் சித்திரங்களை உருவாக்கி வருபவர்தான் கியோஹூஸா நோஸூ.

ஜப்பானைச் சேர்ந்த இவர், ஒருவரின்  இறப்புக்கு முந்தையை  ஒளிப்படங்களை (pre death photos) எடுத்து வருகிறார். இவரின் இந்த வித்தியாசமான அணுகுமுறை ஜப்பான் நாட்டில் உள்ள வயதானவர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தாங்கள் இறந்த பிறகு தங்களின் ஒளிப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்களே தேர்வுசெய்து வருகிறார்கள்.

padangalil 2jpg

 தந்தையால்  கிடைத்த  யோசனை

 “ஒருமுறை என்னுடைய அப்பாவை  நான் ஒளிப்படம் எடுத்தேன். அந்த படம் பார்க்க மிக அழகாக இருந்தது.  அவரின் உன்மையாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக அந்தப் படம் இருந்தது. அந்தப் படத்தை அப்பாவிடம் காட்டி நீங்கள் இறந்தபிறகு இந்தப் படத்தை உங்கள் நினைவாக வைத்துக்கொள்வேன் என்றேன். அதைக் கேட்ட என் அப்பா என்னை அணைத்துக் கொண்டு ‘இன்னும் எவ்வளவு படங்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்றார். அப்போதுதான் எனக்கு இறப்புக்கு முந்தைய படத்தை எடுக்க வேண்டும் என்ற யோசனை தோன்றியது” என்கிறார் அவர்.

டோக்கியோவில் ஒளிப்பட நிறுவனம் நடத்திவரும்  கியோஹூஸா,   நான்காயிரத்துக்கும் மேற்பட்ட  இறப்புக்கு முந்தைய  படங்களை எடுத்துள்ளார். இவரின் வாடிக்கையாளர் பெரும்பாலும் எழுபது முதல் என்பது வயதுடையவர்களாக உள்ளனர்.

‘நாம் இறந்த பிறகு ஏதோ ஒரு படத்தை வைத்துக்கொண்டு எதிர்காலச் சந்ததியினரிடம் இவர்தான் உன்னுடைய தாத்தா, பாட்டி என்று சொல்வதைவிட நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை வெளிப்படுத்தும் விதமாகத்தான்  ஒளிப்படங்கள் இருக்க வேண்டும்.  படம் எடுக்கும்போது யாரையும் சிரியுங்கள் எனச் சொல்ல மாட்டேன். அதற்கு மாறாக  உங்களுடைய பொழுதுபோக்கு என்ன எனப் பேச்சுக்கொடுத்துக்கொண்டே அவர்களின்  இயல்பான சிரிப்பை வரவழைத்து அதைப் படமாக எடுப்பேன்’ என்கிறார் அவர்.

மற்றவர்களைப் படம் எடுக்கும்  கியோஹூஸா நோஸூ தன்னையும் இறப்புக்கு முந்தை ஒளிப்படம் எடுத்து வைத்துள்ளார். “என்னுடைய இறப்புக்கு முந்தைய ஒளிப்படங்கள் இரண்டு வைத்திருக்கிறேன். ஒன்று என்னுடைய  நண்பன் எடுத்தது, இன்னொன்று என்னுடைய மனைவி எடுத்தது” என்கிறார் அவர்.

ஒளிப்படங்கள் என்பது வீட்டின் பெட்டிகளில் வைப்பதல்ல. ஒருவரின் இறப்புக்குப் பிறகு வீட்டில் வைக்கப்படும் அவை, குடும்பத்துப் பெரியவர்களின் நினைவுகளை தலைமுறை தாண்டி எடுத்துச் செல்பவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x