

சொந்த வீட்டுக்காகவோ, அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்காகவோ ஒரு இடத்தை வாங்கும்போது பல விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். இடத்தை பார்த்த உடன் பிடித்துவிட்டது என்பதற்காகவே அதை வாங்கிவிடுவது தவறு. எப்போதும், கட்டிட அனுமதிக்காக செல்லும்போதுதான் பல்வேறு பிரச்சினைகள் வரும். நாங்கள் ‘லீகல்’ பார்த்து தானே வாங்கினோம். சரியாக இருந்ததே. இவ்வளவு விஷயம் உள்ளதா? என்று கேட்கின்றனர்.
ஒரு மனையை வாங்கப்போனால், அந்த மனையானது நாம் விரும்பும் பயன்பாட்டுக்கு உகந்ததா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனையை முதலீட்டுக்காகவோ, எதிர்காலத்தில் வீடு கட்டவோ வாங்கலாம். ஒரு வேளை அந்த மனையை விற்கும் சூழலில், வாங்குபவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல நாம் தயாராக இருக்க வேண்டும். இது போன்ற கேள்விகளை நாமும் கேட்டு விவரங்களை பெற வேண்டியது அவசியம்.