

தமிழக பதிவுத்துறை ஒவ்வொரு விதமான பதிவுக்கும் உரிய முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
1 கிரைய ஆவணம் மற்றும் தானப்பத்திரமாக இருந்தால் சந்தை மதிப்பில் 7 சதவீதம் முத்திரைத்தீர்வை, 2 சதவீதம் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும். பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யும்போது, தமிழக அரசின் புதிய விதியின்படி, ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் போன்ற அசையா சொத்துகளுக்கு பதிவு கட்டணத்தில் ஒரு சதவீத தள்ளுபடி கிடைக்கும்.