இயற்கைக் கொசு விரட்டி

இயற்கைக் கொசு விரட்டி
Updated on
1 min read

கொசுவை விரட்டப் பல முறைகளைக் கையாள்கிறோம். கொசு விரட்டிக்காகச் செயற்கையாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளைக் காட்டிலும் சிறந்தது கொசு விரட்டும் செடிகளை வளர்ப்பது. மாடித் தோட்டங்களிலும் பால்கனிகளிலும் செடி வளர்ப்பது வீட்டிற்கு அழகை மட்டுமல்ல வீட்டில் வசிப்பவர்களுக்கு நல் ஆரோக்கியத்தை வழங்கும். நகர நெருக்கடிகளுக்குள் தோட்டம் அமைத்துச் செடி வளார்ப்பது சாத்தியமான காரியமல்ல.

மேலும் செடி வளர்ப்பதற்குச் சிலர் தயங்குவதுண்டு. காரணம் என்னவென்றால் செடி வளர்ப்பதால் சிறிய சிறிய பூச்சிகள், மரவட்டை, கொசுக்கள் வரக்கூடும் என நினைப்பார்கள். ஆனால் உண்மையிலேயே கொசுக்களை விரட்டும் இயற்கை வேதிப் பொருள்கள் நம் பாரம்பரியச் செடிகளில் நிறைந்துள்ளன.

உதாரணமாக நொச்சி, வேம்பு போன்ற செடிகளில் இந்தப் பண்புகள் மிகுந்துள்ளன. சாமந்தி, நொச்சி, வேம்பு போன்ற தாவரங்களுக்கு இந்தக் குணம் உண்டு. இவை அல்லாது ரோஸ்மேரி, சிட்ரோநெல்லா, ஏஜ்ரேடம் போன்ற செடிகளிலும் இந்தக் குணம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆக இந்தச் செடிகளை வளர்ப்பதால் நமக்கு இருவிதமான பயன்கள் கிடைக்கும். வீட்டிற்கு அழகும் கிடைக்கும். அதேசமயம் கொசுக்களை விரட்டவும் முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in